Last Updated : 06 Apr, 2019 12:00 AM

 

Published : 06 Apr 2019 12:00 AM
Last Updated : 06 Apr 2019 12:00 AM

என் மகனை தோற்கடிக்க காங்கிரஸ் வியூகம்- முதல்வர் குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸும் - மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிகிறது. இந்த கூட்டணியின் சார்பில் மண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சரும் நடிகருமான அம்பரீஷின் மனைவியுமான சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக,அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.

இந்நிலையில் முதல்வர்குமாரசாமி நேற்று மண்டியாவில் கூறியதாவது

:மண்டியா தொகுதி நிலவரம் குறித்து எனக்கு ரகசிய அறிக்கை கிடைத்துள்ளது. அதில் தெரியவந்துள்ள உண்மைகள் மனதுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததால் மஜதவுக்குதான் இழப்பு ஏற்பட்டுள்ளதா? என சந்தேகம் எழுந்துள்ளது. காங்கிரஸார் போட்டியிடும் தொகுதிகளில் மஜதவினர் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் மஜதவினர் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸார் அமைதி காக்கிறார்கள்.

மண்டியாவை பொறுத்தவரை என் மகன் நிகிலுக்கு ஆதரவாக காங்கிரஸார் சரியாக பணியாற்றவில்லை. சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு ஆதரவாக சிலர் மறைமுகமாகவும், பலர் வெளிப்படையாகவும் பணியாற்றுகின்றனர். சுமலதா பெயருக்குத்தான் சுயேச்சை வேட்பாளர். அவருக்கு பாஜகவும், கர்நாடக மாநில விவசாய சங்கமும் வெளிப்படையாகவே ஆதரவு அளித்துள்ளன. அவருக்கு காங்கிரஸும் ஆதரவு அளித்து வருகிறது.

இந்த மூன்று கூட்டணியும் சேர்ந்து என் மகனை தோற்கடிக்க வியூகம் அமைத்துள்ளன. இந்த சக்கர வியூகத்தை வென்று, நிகில் வாகை சூடுவார் என நம்புகிறேன்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x