Last Updated : 02 Apr, 2019 06:58 PM

 

Published : 02 Apr 2019 06:58 PM
Last Updated : 02 Apr 2019 06:58 PM

அபாயகரமான வாக்குறுதிகள், அமல்படுத்தப் பட முடியாதவை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து அருண் ஜேட்லி விமர்சனம்

மக்களவைத் தேர்தல் 2019 வருவதையடுத்து தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மக்கள் நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

 

இதில் குறிப்பாக பல நலத்திட்டங்கள் குறிப்பிடத்தகுந்ததாக அமைந்ததோடு, தேசவிரோதச் சட்டம் நீக்கப்படும் என்று தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது ஹைலைட்டானது.

 

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அருண் ஜேட்லி, “தேசவிரோதச் சட்டத்தை நீக்குவோம் என்று வாக்குறுதி கூறும் காங்கிரஸ் கட்சி ஒரு வாக்குக்குக் கூட தகுதியற்றது.  மேலும் காஷ்மீர் பண்டிதர்களின் துயரம் குறித்து காங்கிரஸ் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.  காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒரு அடையாள தள்ளுபடி கூட செய்யவில்லை” என்று சாடினார்.

 

காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் குறைந்தபட்ச மாதவருவாய் திட்டம், அரசுப்பணிகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், கிராம சபைகளில் மேலும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் 100 நாட்கள் என்பதிலிருந்து 150 நாட்களாக அதிகரிக்கப்படும், விவசாயிகள் கடன்களைக் கட்டாமல் இருந்தால் அது கிரிமினல் குற்றமாக்கப்படாது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தில் கல்விக்கு 6%,  அரசு மருத்துவத் துறையை வலுப்படுத்துதல், பெட்ரோல்., டீசல் விலைகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருதல், தற்போதைய ஜிஎஸ்டி சட்டத்திற்கு பதிலாக ஜிஎஸ்டி 2.0 என்று புதிய திட்டம், குழந்தைகள் கல்வி, இலவசக் கல்வி என்று உயரிய திட்டங்கள் பலவற்றை அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.

 

இந்நிலையில் அருண் ஜேட்லி அதனை விமர்சித்துப் பேசியதாவது:

 

இந்த வாக்குறுதிகளில் சிலபல திட்டங்கள் தேசத்தை உடைப்பதாகும். பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் அது ஒரு போதும் அவர்கள் பார்வையில் இனி குற்றமாகாது. இதனைக் கூறும் ஒரு கட்சி ஒரு வாக்குக்குக் கூட லாயக்கற்றது.

 

ராஜீவ் காந்தி தடா கொண்டு வந்தார், நரசிம்மராவ் அதனை நீக்கினார். மன்மோகன் சிங் பொடா வைத் தள்ளுபடி செய்தார்.  காங்கிரஸ் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதமும் தன நம்மை ஆளும். இதனை காங்கிரஸ் ஏற்படுத்த நினைத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

காங்கிரசின் திட்டங்கள் இவ்வாறாக அபாயகரமானதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் உள்ளது, காங்கிரஸின் வாக்குறுதிகள், மாவோயிஸ்ட்களையும் ஜிஹாதிகளையும் பாதுகாப்பதாக உள்ளது. பயங்கரவாதிகளும் அதன் நண்பர்களும் படைகள் மீது வழக்கு தொடர்வார்கள்.

 

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x