Published : 28 Mar 2019 06:59 PM
Last Updated : 28 Mar 2019 06:59 PM

அருணாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல்: 3 பாஜக வேட்பாளர்கள் வாக்குப் பதிவின்றியே வெற்றி

ஒரு வாக்குக்  கூட பதிவு செய்யப்படாமல் அருணாச்சலப் பிரதேச 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 பாஜக வேட்பாளர்கள் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காரணம் எதிர்த்தரப்பு வேட்பாளர்களில் இருவரது வேட்பு மனுக்கள் தவறாக இருந்ததன் அடிப்படையில் நிராகரிக்கப்பட ஒரு வேட்பாளர் போட்டியிலிருந்து விலகினார்.

 

அலோங் கிழக்குத் தொகுதியில் கெண்டோ ஜினி, யச்சூலி தொகுதியில் தபா தேதிர், திரங் தொகுதியிலிருந்து புர்பா செரிங். ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

அலாங் கிழக்குத் தொகுதியில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் மின்கிர் லோலன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, அதாவது வேட்பு மனுவில்  தந்தை பெயர் டாமின் லோலன் இருக்க வேண்டிய பத்தியில் கிராம முகவரி எழுதப்பட்டதால் ரிட்டர்னிங் ஆபிசர் அவர் வேட்பு மனுவை தகுதியிழப்பு செய்ய நேரிட்டது. இவரது தந்தை டாமின் லோலன் ஒரு குறிப்பிடத்தகுந்த சுதந்திரப் போராட்ட தியாகி இவர் தன் 104வது வயதில் கடந்த ஆண்டு காலமானார்.

 

மேலும் வேட்பு மனுவில் வேட்பாளர் வயது இல்லை, தொகுதிப் பெயர் குறிப்பிடவில்லை. கல்வித்தகுதியும் குறிப்பிடப்படவில்லை. ஷெட்யூல் ட்ரைப் சான்றிதழும் இணைக்கப்படவில்லை.

 

யச்சோலி தொகுதியிலும் பெண் வேட்பாளரான ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் வேட்பு மனு மேற்கூறிய அதே காரணங்களுக்காக நிரகாரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

 

திரங் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து நிற்பதாக இருந்த 2 வேட்பாளர்கள் விலகியதால் இவரும் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

இது அருணாச்சலப் பிரதேசத்துக்குப் புதிதல்ல 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் 11 தொகுதிகளில் காங்கிரஸ் எதிர்ப்பின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x