Last Updated : 28 Mar, 2019 02:56 PM

 

Published : 28 Mar 2019 02:56 PM
Last Updated : 28 Mar 2019 02:56 PM

அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாக தவறாகப் பயன்படுத்துகிறார்: மாயாவதி சாடல்

தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாற்றுவது என்பது அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக தவறாக பயன்படுத்தும் செயல் என்று பகுஜன் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்

இப்பிரச்சினையில் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரியாக செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை  இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று புதன்கிழமை அன்று பிரதமர் மோடி தொலைக்காட்சிகளில் தோன்றி நாட்டு மக்களிடம் பேசினார்.

மாயாவதி அடுத்தடுத்து அவர் பதிவிட்ட இரு கருத்துக்கள் வருமாறு:

பிரதமர் மோடி நேற்று (புதன்கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி முன்அனுமதிபெறாமல்  நாட்டு மக்களிடம் உரையாற்றியது ஏன்? எதற்காக? என்பதுகுறித்து ஆராய தேர்தல் ஆணையம் ஒரு ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது. மோடி தேர்தல் ஆதாயங்களுக்காக தனக்குள்ள அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதில் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்,

இவ்வாறு தனது முதல் ட்விட்டர் பதிவில் மாயாவதி தெரிவித்துள்ளார்.

அதேபோல இன்னொரு பதிவில்,

ஏற்கெனவே பாஜக தலைவர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைமீறல் வழக்கில் குற்றவாளிகள் என சட்டம் ஒழுங்கு விவரகாரங்களில் நிரூபிக்கப்பட்ட அனுபவங்கள் உள்ளன. அவ்வகையில் பிரதமர் மோடி மீண்டும் அதேபோக்கில் சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் ஆணையத்தின் முறைப்படி முன் அனுமதி எதுவும் பெறாமல் உரையாற்றியுள்ளார். அப்படி அவசரஅவசரமாக பேசுவதற்கான அவ்வளவு நெருக்கடி எதுவும் இங்கில்லை.

இப்பிரச்சினையில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு தனது அடுத்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, புதன் அன்று செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையின் சிக்கலான திறனை நிரூபிக்க, தனது செயற்கைக்கோள்களில் ஒன்றையே சுட்டு வீழ்த்தியது. அத்தகைய ஆயுதத்தை செயற்கைக்கோள் மூலம் பயன்படுத்தியது உலக அளவில் இந்தியா நான்காவது நாடு ஆகும்.

பூமியிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு செயற்கைக்கோளை அதன் சரியான புள்ளியில் ஏவுகணை மூன்று நிமிடங்களுக்குள் சுட்டுவீழ்த்தியது என்றும் 'மிஷன் சக்தி' வெற்றிக்குப் பிறகு இந்தியா உலகளாவிய விண்வெளி சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்றும் நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x