Published : 26 Mar 2019 07:42 PM
Last Updated : 26 Mar 2019 07:42 PM

நோய் விடுப்புக் காலக்கட்டத்திலும் ஸ்ரீநகரில் தன் சகாக்களுடன் இணைய விங் கமாண்டர் அபிநந்தன் முடிவு

தன் மிக்-21 போர் விமானத்திலிருந்து பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தை வீழ்த்திய ‘வீரத்திருமகன்’ என்று அழைக்கப்படும் விங் கமாண்டர் அபிநந்தன் தன் ‘நோய் விடுப்பு’ காலக்கட்டத்தைக் கூட குடும்பத்தினருடன் செலவழிப்பதைத் துறந்து ஸ்ரீநகரில் தன் சக வீரர்களுடன் இருப்பதற்காக ஸ்ரீநகர் செல்ல முடிவெடுத்துள்ளார்.

 

பாலகோட் மறுதாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினால் பிடிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்ட அபிநந்தன் மருத்துவ ஆலோசனைகளின் படி 4 வாரங்கள் நோய் விடுப்பு எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார்.

 

“இந்த நோய் விடுப்புக் காலகட்டத்தில் அவர் சென்னையில் தன் குடும்பத்துடன் விடுப்பை செலவழிக்கலாம், ஆனால் தன் சக வீரர்கள் பணியாற்றும் படைக்கே மீண்டும் செல்ல அபிநந்தன் முடிவெடுத்துள்ளார்” என்று விமானப்படை வட்டாரங்கள் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளது.

 

“இப்போதைக்கு தான் சார்ந்த படை வீரர்களுடன் ஸ்ரீநகரில் இருக்க அபிநந்தன் முடிவு செய்துள்ளார். இவர் மீண்டும் மருத்துவ சீராய்வுக்காக புதுடெல்லி திரும்ப வேண்டியிருக்கும் அப்போதுதான் அவரது உடல்தகுதி மீண்டும் விமானத்தில் பறக்க ஏதுவாக உள்ளதா என்று தெரிவிக்கப்படும்” என்று அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சிக் லீவை எப்படி செலவழிக்க வேண்டும் என்பது தனிப்பட்ட சுதந்திரம்தான் ஆனால் அவர் மீண்டும் ஸ்ரீநகருக்கே திரும்ப முடிவெடுத்திருப்பது நெகிழ்ச்சியூட்டும் முடிவாகப் பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x