Published : 23 Mar 2019 07:10 PM
Last Updated : 23 Mar 2019 07:10 PM

சஸ்பென்ஸ் உடைத்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா 

மதச்சார்பற்ற ஜனதாதள தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமரும் ஆன எச்.டி. தேவே கவுடா லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா  என்ற இழுபறி நிலையும் சஸ்பென்சும் இருந்து வந்தது.

 

இந்நிலையில் அவர் தும்கூர் தொகுதியில் போட்டியிடுவதாக இத்தனை நாட்கள் காத்து வந்த சஸ்பென்சை உடைத்துள்ளார்.

 

85 வயதாகும் தேவே கவுடா முன்னதாக டெல்லியில் தன்னால் என்ன இந்த வயதில் பங்களிப்பு செய்து விட முடியும் என்று சந்தேகம் கொண்டு போட்டியிடுவதா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் இருந்து வந்தார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பாபு, தேவேகவுடா தும்கூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவித்து இதுகாறும் இருந்து வந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.

 

தேவே கவுடா மார்ச் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார், காங்கிரஸ், ஜனததளம் எஸ் கட்சியினர் அப்போது உடனிருப்பார்கள்.

 

ஹாசன் தொகுதியைத் தன் பேரன் பிரஜ்வால் ரெவன்னாவுக்கு விட்டுக் கொடுத்தார் தேவே கவுடா.

 

தும்கூர் தொகுதியில் தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக எம்.பி. முட்டஹனுமே கவுடா அறிவித்த அதே நாளில் தேவேகவுடா அத்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் இவர் கோபமடைந்து போட்டி வேட்பாளராகக் களமிறங்கினால் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கெனவே இருக்கும் குழப்பங்களுடன் இந்தப் புதிய பிரச்சினையும் ஏற்படும்.

 

ஏற்கெனவே அங்கு காங்கிரஸ் எம்.பி இருக்கும் போது சீட்டை தேவே கவுடாவுக்கு தாரை வார்த்தது அந்தத் தொகுதி காங்கிரஸார் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

 

பாஜக தரப்பில் தும்கூரில் பசவராஜ் களமிறக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x