Last Updated : 23 Mar, 2019 07:39 AM

 

Published : 23 Mar 2019 07:39 AM
Last Updated : 23 Mar 2019 07:39 AM

முதல்வர் பதவியில் தொடர்வதற்காக பாஜக தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கியதாக எடியூரப்பா மீது புகார்

கர்நாடகாவில் முதல்வர் பதவியில் தொடர்வதற்காக எடியூரப்பா பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு ரூ.1800 கோடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அளித்த ரகசிய டைரி ஒன்றை அடிப்படையாக வைத்து ‘தி கேரவன்' பத்திரிகை நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ''கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா 2009 காலக்கட்டத்தில் தான் முதல்வராக தொடர்வதற்காக பாஜக உயர்மட்ட தலைவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு ரூ.1,800 கோடியை கொடுத்துள்ளார். இதில் தற்போதைய மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரின் பெயரும், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. இந்த டைரியில் வழங்கப்பட்ட தொகையை எழுதி, அதன் கீழே எடியூரப்பா கையெழுத்திட்டுள்ளார்.

அதில், அருண் ஜேட்லிக்கு ரூ.150 கோடி, நிதின் கட்கரிக்கு ரூ.100 கோடி, அவரது மகனின் திருமணத்துக்கு ரூ. 10 கோடி, ராஜ்நாத் சிங்குக்கு ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதே போல அத்வானிக்கும், முரளி மனோகர் ஜோஷிக்கும் தலா ரூ. 50 கோடி, 2009 காலக்கட்டத்தில் எடியூரப்பாவுக்கு இடையூறாக இருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ரூ.150 கோடி, வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு ரூ. 250 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ. 2690 கோடி பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 - 2014 காலக்கட்டத்தில் எழுதப்பட்ட தாக கருதப்படும் இந்த டைரி எடியூரப் பாவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எடியூரப்பா எழுதிய கடிதங்கள், முக்கிய குறிப்புகள், டோக்கன் ரசீதுகள் ஆகியவற் றையும் ‘தி கேரவன்' பத்திரிகை வெளி யிட்டுள்ளது. இந்த டைரி விவகாரத்தை லோக்பால் அமைப்பு விசாரிக்க வேண்டும் என‌ காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

எடியூப்பா மறுப்பு

எடியூரப்பா கூறுகையில் ‘‘இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இத்தகைய பொய்யான குற்றச்சாட்டின் மூலம் தேர்தல் வருவதற்கு முன்பே காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. இவ்வழக்கை விசாரித்த வருமான வரித்துறை இந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என ஏற்கெனவே தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் என் மீது அவதூறு பரப்பி, பாஜகவை வீழ்த்த சதி செய்கிறார்கள். பிரதமர் நரேந்திர‌ மோடி, பாஜகவுக்கு அதிகரித்து வரும் புகழை சகிக்க முடியாமல் காங்கிரஸ் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது." என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x