Last Updated : 27 Feb, 2019 07:49 AM

 

Published : 27 Feb 2019 07:49 AM
Last Updated : 27 Feb 2019 07:49 AM

பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது விமானப் படை தாக்குதல்: கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்கள் புகழாரம்

பாகிஸ்தானில் இந்திய விமானப் படைகள் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பால்காட் பகுதியில் இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்-இ-முகமதுவின் முகாம்களை அழித்தனர். இதற்கு பல கட்சித் தலைவர்க பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா: சாதனை செய்த இந்திய விமானப் படைக்கு பாராட்டுகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா மிகவும்பாதுகாப்பாக இருக்கிறது என்பதைவிமானப்படையினர் உணர்த்திவிட்ட னர். நமது புதிய இந்தியாவானது, தீவிரவாதத்தையும், தீவிரவாத செயல்களையும் வேரூன்ற விடாது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: இந்திய விமானப் படை பைலட்டுகளுக்கு எனது வணக்கங்கள்.

பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ்: புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததால் இந்திய மக்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் மீதான தாக்குதலால் அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகத் தரத்திலான தாக்குதலை விமானப் படை நடத்தியுள்ளது. இந்திய விமானப்படை விமானிகளுக்கு நான் வணக்கம் தெரிவிக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி: இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பாராட்டுக் குரியது. இந்திய வீரர்கள் பாதுகாப்புடன் சென்று உறுதியான முயற்சியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர்: இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலை மிகப்பெரிய சாதனையாக மக்கள் பார்க்கின்றனர். விமானப் படை வீரர்கள் பக்கம், மக்கள் நிற்கின்றனர். பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் அபார நம்பிக்கையை வைத்துள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் சிறப்பானது. இந்திய விமானப் படை என்பது இந்தியாஸ் அமேஸிங் பைட்டர்ஸ்..ஜெய்ஹிந்த்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்: இந்திய விமானப் படையினரின் மிகப்பெரிய சாசகமாக இது அமைந்துள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு மிகச் சரியான எச்சரிக்கையை விமானப் படை கொடுத்துள்ளது. இனிமேல் புல்வாமா தாக்குதல் போன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளவேண்டும். இந்திய விமானப் படைக்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி: இந்திய ராணுவத்துக்கு இதுபோன்ற அதிகாரத்தை பிரதமர் மோடி முன்னதாகவே கொடுத்திருந்தால் புல்வாமா, பதான்கோட், யூரி தாக்குதல்கள் நடத்திருக்காது. ஜெய்ஷ் தீவிரவாதிகளை தாக்கிய தீரமிக்க இந்திய விமானப் படையினரின் பணிக்கு எனது வணக்கங்கள்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்: பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படையினரின் தீரத்தை நான் பாராட்டுகிறேன்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா: முதல்முறையாக அண்டை நாட்டிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி: இந்தியா, பாகிஸ்தானின் இலக்கான தீவிரவாதிகள் மீது தாக்குதல் என்பது நிறைவேறியுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தினோம் என்று அறிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதை மறுத்துள்ளது. முரண்பாடான செய்திகள் அங்கிருந்து வருகின்றன. ஆனால் 2 நாடுகளின் எண்ணம் நிறைவேறியுள்ளது.

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து: தீவிரவாத அமைப்புகள் மீதான போர் நடந்துள்ளது. இந்திய விமானப் படைக்கு எனது வாழ்த்துக்கள்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்: தீரமான மற்றும் சிறப்பான வான்வழித் தாக்குதலை நடத்திய இந்திய விமானப் படைக்குப் பாராட்டுக்கள்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: இந்திய விமானப்படையினரின் தீரம் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு எனது வணக்கங்கள். ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்: இந்திய விமானப் படையினரின் செயலைப் பார்த்து நாடே பெருமை கொள்கிறது. ஜெய் ஹிந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x