Published : 26 Feb 2019 08:48 PM
Last Updated : 26 Feb 2019 08:48 PM

துல்லியத் தாக்குதல் 2.0: இந்திய விமானப்படை 21 நிமிடங்களில் நடத்தி முடித்த சாகசம்- 10 முக்கிய தகவல்கள்

பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. இதுபற்றி 10 முக்கிய தகவல்கள்:

1) ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடியும் உறுதி அளித்து இருந்தார்.

2) புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று  அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

3) இதில் பலாகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

4) உலக அளவில் ஒரு விமானம் ஓரிடத்தில் இருந்து புறப்பட்டு தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வருவதற்கு குறைந்தபட்ச நேரமாக 46 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய தாக்குதலில் இந்திய விமானப்படையின் 12 விமானங்கள் 21 நிமிடங்களுக்குள் துல்லியமாக தாக்குதலை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ளது.

5) மிராஜ் 2000 விமானங்கள் சரியாக மிகச் சரியாக பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. 

6) தாக்குதல் நடந்த பகுதிகளில் பாலாகோட் பகுதி மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வாகா மாகாணத்தில் இந்தப் பகுதி ஜெய்ஷ் - இ- முகமது மட்டுமின்றி தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. அந்த இடத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக தகர்த்துள்ளது.

7) ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனரும், அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான மெளலானா யூசுஃப் அசார் கட்டுப்பாட்டில் இங்குள்ள ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் செயல்பட்டு வந்தது. இந்த தாக்குதலில்  ஏராளமான தீவிரவாதிகள், தீவிரவாதப் பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், தற்கொலைப் படை வீரர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

8) இந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம். இதனை அங்குள்ள சில ஊடகச் செய்தியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

9) இந்திய விமானப்படை தாக்குதலில் தீவிரவாத முகாம்களை குறி வைத்து மட்டுமே இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தான் பொதுமக்களுக்கோ, அந்நாட்டு ராணுவத்தினருக்கோ எந்த பாதிப்பும்

10) இந்த தாக்குதலை தொடர்ந்து குஜராத்தில் உலவிய ஆளில்லா பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x