Published : 23 Feb 2019 09:02 AM
Last Updated : 23 Feb 2019 09:02 AM

மகாராஷ்டிராவில் 5 பாஜக எம்பி.க்களுக்கு ‘டிக்கெட்’ இல்லை

மகாராஷ்டிராவில் பாஜக எம்.பி.க்கள் 5 பேருக்கு மீண்டும் ‘டிக்கெட்’ கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் இப்போது உள்ள எம்.பி.க்களில் 5 எம்.பி.க்களுக்கு அவர்களது உடல்நிலை, கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படாதது, மக்களிடம் அதிருப்தி போன்ற காரணங்களால் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. ‘‘மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு இப்போது 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் குறைந்தது 5 எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது’’ என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கிரித் சோமையா (மும்பை வடகிழக்கு), அனில் ஷிரோல் (புனே), ஷரத் பன்சோட்(சோலாபூர்), சுனில் கெய்க்வாட் (லத்தூர்), திலீப் காந்தி (அகமது நகர்) ஆகிய எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் கூறினார். இதில் கிரித் சோமையா என்பவர் கடந்த காலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும் அவரது குடும்பத்தையும் கடுமையாக தாக்கிப் பேசியவர். சிவசேனா தொண்டர்களின்அதிருப்தியால் அவருக்கு மீண்டும் ‘டிக்கெட்’ கிடைக்காது என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x