Published : 21 Feb 2019 11:35 AM
Last Updated : 21 Feb 2019 11:35 AM

பாகிஸ்தான் ஒழிக என்று சொன்னால் சிக்கன் லெக் பீஸில் 10 ரூபாய் தள்ளுபடி

சட்டீஸ்கரின் ஜெக்தல்பூரில் உள்ள உணவுக் கடை உரிமையாளர் நூதனமான தள்ளுபடியை அறிவித்துள்ளார்.

புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக அறிவித்தனர். கோவா வாழ் காஷ்மீரிகள், தங்களின் கடைகளை ஒரு நாள் அடைத்து, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்தவகையில் சட்டீஸ்கரின் ஜெக்தல்பூரில் உள்ள உணவுக் கடை உரிமையாளர் நூதனமான தள்ளுபடியை அறிவித்துள்ளார். அதன்படி, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பாகிஸ்தான் ஒழிக என்று கூறுபவர்களுக்கு சிக்கன் லெக் பீஸில் 10 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

இதுகுறித்துப் பேசிய கடை உரிமையாளர் அஞ்சல் சிங், ''மனித நேயத்தை பாகிஸ்தான் என்றுமே மதித்ததில்லை. வருங்காலத்தில் உணரவும் போவதில்லை. அதனால் எல்லோரும் தங்களின் இதயங்களில் இருந்து 'பாகிஸ்தான் ஒழிக' என்று கூறவேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x