Last Updated : 20 Feb, 2019 10:22 AM

 

Published : 20 Feb 2019 10:22 AM
Last Updated : 20 Feb 2019 10:22 AM

சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து: தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது

சமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு  மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஷாசாத் சோலங்கி(வயது19) என்ற இளைஞர் சமூக ஊடங்களில் புல்வாமா தாக்குதல் குறித்து தேசவிரோத கருத்துக்களையும், இரு சமூகங்களுக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இவரின் கருத்துக்கள் சமூக ஊடங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் பரவியது. சோலங்கியின் கருத்துக்கள் அடங்கிய பதிவு, ஒரு போலீஸ் அதிகாரிக்கு  கிடைக்கவே, தாமாக முன்வந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, அவரின்  முகவரியை போலீஸார் கண்டுபிடித்ததில் தங்கூர் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துங்கார்பூர் பகுதி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த முகவரிக்கு சென்ற போலீஸார் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரப்பிய  சோலங்கியை கைது செய்தனர். விசாரணையில் சோலங்கி 12-ம் வகுப்பு படித்து வருபவர் எனத் தெரிந்தது.

தனது முகநூல் பக்கத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து தேசவிரோத கருத்துக்களையும், பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்களையும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை தாமாக முன்வந்து வழக்காகப் போலீஸார் பதிவு செய்து கைது செய்தனர்.

சோலங்கி மீது ஐபிசி 124ஏ(தேசவிரோத சட்டம்), 153ஏ(இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x