Last Updated : 14 Feb, 2019 01:53 PM

 

Published : 14 Feb 2019 01:53 PM
Last Updated : 14 Feb 2019 01:53 PM

சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு

காஷ்மீர் மாநிலத்தின் கிராம சபைத் தலைவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரை சென்னை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக கொடியசைத்து  ராணுவம்,வழியனுப்பிவைத்தது.

எப்போதும் துப்பாக்கி, வெடிகுண்டுத் தாக்குதல் வருமோ என்ற பதட்டத்திலேயே வாழும் காஷ்மீர் மக்கள் சிலருக்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வெளிக்காற்றை சுவாசிக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த விவரம்:

காஷ்மீர் மாநிலத்தின் ராஜூரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கிராம சபைத் தலைவர்கள் பலரும் இந்தியாவின் சில பகுதிகளை பார்வையிட 16 நாள் பயணம் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹிவேபஜார் மற்றும் ராலேகான் சித்தி போன்ற மாதிரி கிராமங்களில் அங்கு நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் முறையில் சுயராஜ்ய முறையிலான கிராம சபைகளையும் அவர்கள் பார்வையிடுவார்கள்.

இந்த பயணத்தில் ஊழல் எதிர்த்து போராடிவரும் காந்தியவாதியான அன்னா ஹசாரேவையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு வருகை தரும் காஷ்மீர் மக்களுக்கு திறன் வளர் பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டறைக்கு உன்முக் பட்டறை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை நிகழ்வுகளின்போது முக்கியமாக குழு கலந்துரையாடல்களும், செயல்திறன் பயிற்சிகளும் சுய மேம்பாட்டு திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.

அடுத்து, புதுச்சேரிச்சேரியில் உள்ள நிலையான வாழ்வாதார கல்லூரியில் கிராமப்புற சுயநிர்ணய மாதிரி ஆட்சிமுறை தொடர்பாக ஒரு சிறிய பட்டறை நடத்தப்படும்.

இந்த சுற்றுப்பயணம் புது டெல்லியில் முடிவடையும், அங்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் இந்திய ராணுவத் தளபதி (CoAS)யை சந்திக்கும் வாய்ப்புகளும் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

காஷ்மீர் கிராம முக்கியஸ்தர்களின் ஞானம் மற்றும் விழிப்புணர்வுகளை மேம்படுத்த ராணுவத்தினர் மேற்கொண்டுள்ள இம்முயற்சி சண்டை பதட்டம் நிலவும் ராஜவ்ரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள கிராமங்களிடையே நல்லெண்ண செய்திகளை பரப்ப உதவும்.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x