Published : 11 Feb 2019 08:13 PM
Last Updated : 11 Feb 2019 08:13 PM

இது ரயில் அல்ல, பறவை, விமானம்- பியூஷ் கோயல் ட்வீட் வீடியோ: ஃபாஸ்ட் பார்வர்ட் செய்யப்பட்டது என குஷ்பு கடும் சாடல்

பிரதமர் மோடியினால் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி வைக்கப்படும் இந்தியாவின் முதல் அதிவேக ரயிலின் வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவரே சுய ஆச்சரியத்துடன்  ‘இது பறவை, இது விமானம் இந்தியாவின் முதல் செமி-ஹைஸ்பீட் ரயிலைப் பாருங்கள், மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டது. வந்தே பாரத் விரைவு ரயில் ஒளிவேகத்தில் கடந்து செல்வதைப் பாருங்கள்’ என்று டிவீட் வீடியோவை வெளியிட்டார்.

 

ஆனால் இது ட்விட்டர்வாசிகள் மத்தியில் எடுபடவில்லை. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் பியூஷ் கோயல் இந்த வீடியோவில் ரயிலை பாஸ்ட் பார்வர்ட் மோடில் போட்டுக் காட்டியுள்ளார் என்று கடும் கேலியில் இறங்கினர்.

 

உடனேயே குஷ்பு சுந்தர் தன் ட்வீட்டில், “இது ஃபிரேம் ஸ்பீட், பியூஷ்ஜி இது டிஜிட்டல் இந்தியா ராஜீவ் காந்தியின் கனவு இது.  ஃபிரேம் ஸ்பீடை நீங்கள் அதிகரித்தால் நிச்சயம் அந்த ரயில் இந்த வேகத்தில் செல்லும், ரொம்பவும் கடினமாக முயற்சிக்காதீர்கள், உண்மை உங்கள் கைகளில் இல்லாதது. பிரதமருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரியும் இல்லையா?” என்று கேலி செய்துள்ளார்.

 

 

ஆனால் பாஜக ஆதரவாளர்கள் பியூஷ் கோயலுக்கு ஆதரவாக,  “பிரதமர் நரேந்திர மோடி மணிக்கு 180கிமீ வேக ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலை பிப்ரவரி 15-ல் தொடங்கை வைக்கிறார். இந்த வீடியோவை ஃபாஸ்ட் பார்வர்ட் என்று கூறுபவர்கள் உண்மையில் டிக்கெட் வாங்கிப் பயணித்துப் பார்க்கவும். வேகத்தை அனுபவிக்கவும் “ என்று ட்விட்டர்வாசி ஒருவர் பதில் அளித்துள்ளார்.

 

ட்ரெய்ன் 18 என்ற இந்த செமி-ஹைஸ்பீட் ரயில் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஓடவிருக்கிறது, பிரதமர் பிப்.15ம் தேதி இதனை தொடங்கி வைக்கிறார். இதில் 2 வகுப்புகள் உள்ளன, ஒன்று உயர்தர வகுப்பு, இரண்டாவது சேர்கார் வகுப்பு, வகுப்புவாரியாக உணவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x