Published : 11 Feb 2019 03:57 PM
Last Updated : 11 Feb 2019 03:57 PM

தூக்கிலிடப்பட்ட தலைவரின் உடலை எங்களிடம் கொடுங்கள் - கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள காஷ்மீர் பிரிவினைவாதிகள் கோரிக்கை

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர் மொஹமத் மக்பூல் பாத் 1984ல் தில்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டு 35 ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும்விதமாக காஷ்மீரில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் இன்று முழுநாள் கடையடைப்புக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மற்றும் அரசு பேருந்துகளும் இயங்காததால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

ஹூரியத் மாநாடு மற்றும் ஜே.கே.எல்.எஃப் ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரிவினைவாதிகளின் கூட்டு எதிர்ப்பு தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் காஷ்மீரில் புதைப்பதற்காக மொஹமத் மக்பூல் பாத் இறந்த உடலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை முன்கூட்டியே தடுக்கும்விதமாக, பிரிவினைவாதத் தலைவர்களான சையத் அலி ஷா கிலாணி மற்றும் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் மற்றும் பல்வேறு பிற பிரிவினைவாதக் குழுக்களின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் ஏராளமான பாதுகாப்பு படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் மாய்சூமா, ஜேகேஎல்எப் வலுவான பகுதிகள் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜேகேஎல்எப் எனப்படும் காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர் பாத் 1984, பிப்ரவரி 11ல் திஹார் சிறைச்சாலைக்குள் தூக்கிலிடப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x