Published : 04 Feb 2019 06:51 PM
Last Updated : 04 Feb 2019 06:51 PM

வங்கி இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: புதுடெல்லியில் 15 ஆயிரம் பேர் திரண்டனர்

விஜயா வங்கி, தேனா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடோ ஆகியவற்றை ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

இப்போராட்டத்ததின்போது புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓய்வூதிய மறுசீரமைப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அனைத்திந்திய வங்கி சம்மேளன பொதுச் செயலாளர் சவுமியா தத்தா இப்போராட்டம் குறித்து தெரிவித்ததாவது:

இப்போராட்டத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி பணியாளர் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைத்துள்ளதற்கும் வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததனர்.

இப்போராட்டத்தில் மண்டல ஊரக வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பிராந்திய ஊரக வங்கிகளை ஒன்றாக இணைப்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த இணைப்புகளால் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக எந்த விதமான பயனும் இல்லை. 

வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச்செலுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபடும் கார்பரேட் மோசடிக்காரர்களின் பட்டியலை வெளியிட வேண்டுமென வங்கி ஊழியர்கள் விரும்புகின்றனர்.

குறைந்தபட்ச ஊதியக் கொள்கை அடிப்படையில் நான்கு அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது 11வது இருபடித்தான தீர்வு திட்டப்படி ஒரு கவுரவமான ஊதியதவிகிதத் திருத்தம் பற்றிய ஒரு முடிவை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வங்கி ஊழியர்கள் இன்றைய போராட்டத்தில் முன்னெடுத்தனர்.

இவ்வாறு சவுமியா தத்தா தெரிவித்தார்.

நாடு முழுவதும் பரவியுள்ள அகில இந்திய வங்கி வங்கிப் பணியாளர் சம்மேளனத்தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போராட்டத்தில் 15 ஆயிரம் வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x