Last Updated : 01 Feb, 2019 02:18 PM

 

Published : 01 Feb 2019 02:18 PM
Last Updated : 01 Feb 2019 02:18 PM

பிரதமர் மோடி அரசு சொல்லி அடித்த சிக்ஸர்கள்: இடைக்காலப் பட்ஜெட்டில் பல சலுகைகள்

இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட போது மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்னும் பல ’சிக்ஸர்கள்’ உள்ளதாக சூசக அறிவிப்பளித்திருந்தார். இது உண்மை என நிரூபிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு சமர்பித்த இடைக்காலப் பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் சிக்ஸர்களாக அடிக்கப்பட்டுள்ளன.

இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பல புதிய அறிவிப்புகளும், சலூகைகளையும் அளித்துள்ளார். குறிப்பாக வருமான வரி வரம்பு ரூ. 2.5 லட்சம் முதல் ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதை கடந்த மாதம் 10 ஆம் தேதி ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் ’வருமானவரி உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ’சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்’ எனும் தலைப்பில் செய்தி வெளியானது. அதில், வருமான வரி வரம்பு உயர்த்தப்பட இருப்பதாக முன்னமே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில், இடைக்காலப் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிப்பு மரபு மீறிய செயல் எனவும், எனினும் அதை மீறக்கூடாது என்ற சட்டம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது உண்மை என நிரூபிக்கும் வகையில் இன்று வருமான வரி செலுத்துவோருக்கான வரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் சொந்த வீடு வைத்திருப்போர் மற்றும் பென்ஷன் பெறுவோர் என சிலருக்கு மேலும் பல வரி சலூகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் பேசும்போது, ‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? இது முதல் சிக்ஸர் அல்ல.

அடுத்தடுத்து பல சிக்ஸர் வரவுள்ளது. இந்த சிக்ஸர்கள் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான சிக்ஸர்களாக  இருக்கும். இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.’ எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ரவிசங்கர் கூறியது போல் ஆட்சி முடியும் நேரத்தில் இன்று பிரதமர் மோடி அரசு பல சிக்ஸர்களை அடித்துள்ளது. இதன் பலன் வரும் மே மாதத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x