Last Updated : 30 Jan, 2019 09:18 AM

 

Published : 30 Jan 2019 09:18 AM
Last Updated : 30 Jan 2019 09:18 AM

தேர்தலுக்குள் கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டம்: எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்க வியூகம்

எதிர்வரும் மக்களவை தேர்தலுக் குள் கர்நாடகாவில் நடந்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள் ளது. இதற்காக, அக்கட்சி புதிய வியூகங்களை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமார சாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி நடந்து வருகிறது. இதில், இரு கட்சியினரிடையே அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள், கூட்டணி அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள னர். அத்துடன், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் மும்பையில் முகாமிட்டுள்ள னர். இதனிடையே, காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 2 சுயேச்சை எம்எல்ஏக் களும் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இந்நிலையில், 2 சுயேச்சை எம்எல்ஏக்களையும், 6 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக் களையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.

இதே போல், காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்கை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கணேஷிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,எதிர்வரும் மக் களவைத் தேர்தலுக்குள் கர்நாடகா வில் நடந்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என அக்கட்சியின் கர்நாடக தலைவர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமலு ஆகியோருக்கு பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படு கிறது. கடந்த இரு வாரங்களாக நீடித்த ‘ஆப்ரேஷன் தாமரை' மூலமாக பாஜக இதுவரை 2 சுயேச்சை எம்எல்ஏக்களை மட்டுமே தங்கள் பக்கம் இழுத்துள் ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரையும் இதுவரை அதிகாரப் பூர்வமாக அக்கட்சி இழுக்க வில்லை. இந்நிலையில், எடியூரப்பா தமது அடுத்தக்கட்ட நடவடிக்கையை வரும் 8-ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

அதாவது, அன்றைய தினம் கர்நாடகா பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் போது, 6 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைக்க வியூகம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தவும் ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு கோரிக்கை விடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், 6 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழாது. ஏனெனில், 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 80 உறுப்பினர்க‌ளும், மஜத-வுக்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த கூட்டணிக்கு 2 சுயேச்சை உறுப் பினர்களும், 1 பகுஜன் சமாஜ் உறுப் பினரும் ஆதரவு அளித்துள்ளன‌ர்.

104 உறுப்பினர்களை கொண்ட பாஜகவுக்கு 2 சுயேட்சை எம்எல்ஏக் கள் ஆதரவு அளித்துள்ளனர். பாஜக ஆட்சியை பிடிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, கூடுதலாக‌ இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு அக்கட்சிக்கு தேவைப்படுகிறது. அதே போல, ஆட்சியை கவிழ்க்க வும் 11 எம்எல்ஏக்களை பாஜக ராஜி னாமா செய்ய வைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x