Published : 27 Jan 2019 09:14 AM
Last Updated : 27 Jan 2019 09:14 AM

மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்கி ஏழரை கோடி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம்- பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகள் கடும் அதிருப்தி

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமான, ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக் கிய யோஜனா’ உட்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கி, நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பி வருகிறார். இதனால் பாஜக அல்லாத மாநில அரசுகள் அதிருப்தி அடைந்துள்ளன.

 

மக்களவை தேர்தல் விரைவில் நடை பெற உள்ளது. இந்தத் தேர்தலில் மத்தி யில் ஆளும் பாஜக.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இந் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி 2 தாள்களில் எழுதிய கடிதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளிடம் இருந்து கருத்துகள் பெறவில்லை என்று குற்றம் சாட்டப்படு கிறது.

 

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்ட பயனாளி களுக்கு அனுப்ப மொத்தம் 7.5 கோடி கடிதங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.15.75 கோடி செலவிடப்பட் டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

 

எனது வாழ்க்கையில் வறுமையை மிக நெருக்கமாக அனுபவித்தவன் நான். ஏழை களை வறுமையில் இருந்து மீட்க வேண்டும். அதற்கு ஒரே வழி அவர் களுடைய பொருளாதாரத்தை மேம் படுத்த வேண்டும். இந்தக் காரணத்துக் காகத்தான், என்னை மக்கள் பிரதமராக தேர்வு செய்த நாளில் இருந்து, ஏழை களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறேன்.

 

ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவது முதல் அவர்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது வரை.. கல்வி முதல் சுகாதாரம் வரை பல்வேறு நடவடிக்கைகளை நாங் கள் எடுத்து வருகிறோம்.

 

இவ்வாறு கடிதத்தில் மோடி உள்ளூர் மொழியில் எழுதியுள்ளார்.

 

மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, சவுபாக்யா திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித் தும் தனது கடிதத்தில் பிரதமர் மோடி விளக்கி உள்ளார்.

 

இதுகுறித்து ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்ட தலைமை நிர்வாக அதிகாரி இந்து பூஷண் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நிர் வாகச் செலவில் இருந்துதான் பிரதமர் கடிதங்கள் அச்சிடப்பட்டுள்ளன. எனவே, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நோயாளி களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

எனினும், பிரதமர் கடிதம் அனுப்பு வதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ் கூறும் போது, ‘‘பிரதமரின் கடிதங்கள் தபால் அலுவலகங்களில் இருந்து விரைவு தபாலில் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு கடிதத்துக்கும் ரூ.40 செலவாகும். ஆனால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியே ரூ.2000 கோடிதான். கடிதம் அனுப்புவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 

இதற்கு இந்து பூஷண் பதில் அளிக்கை யில், ‘‘மக்களுக்கு கடிதம் அனுப்புவதில் தேர்தல் மாயாஜாலம் எதுவும் இல்லை. இந்தக் கடிதத்தால், ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் குறித்து ஏராளமான மக்க ளுக்கு தெரிய வந்தள்ளது. மேலும், இந் தக் கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் ஏராளமான மக்கள் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முன்வந்துள்ளனர்’’ என்றார்.

 

மேற்குவங்கத்திலும் வங்காள மொழி யில் பிரதமர் எழுதிய கடிதம் விநியோகிக் கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தால் கோபம் அடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

 

ஆனால், பாஜக எம்.பி. வி.முரளிதரன் கூறும்போது, ‘‘மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு மக்களுக்கு நேரடியாக கடிதம் அனுப்புகிறது. இதை அரசியலாக சிலர் நினைக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் இருந்த போது பணத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களாக இருக்க வேண்டும். நலத்திட்டங்கள் குறித்த விவரம் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வில்லை. அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x