Last Updated : 14 Jan, 2019 11:15 AM

 

Published : 14 Jan 2019 11:15 AM
Last Updated : 14 Jan 2019 11:15 AM

உ.பி.யில் வாஜ்பாய் பெயரில் புதிய மாவட்டம்: ஆக்ராவில் இருந்து உருவாகிறது

முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய மாவட்டம் உருவாகிறது. இதற்காக பாஜக ஆளும் உ.பி.யின் ஆக்ரா பிரிக்கப்பட உள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் 16-ல் தன் 93-வது வயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார். பல்வேறு கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி செய்த பாஜகவின் முதல் இந்திய பிரதமரான வாஜ்பாயை, தம் முக்கியத் தலைவராக அக்கட்சி நினைவுகூர்ந்து வருகிறது.

இந்த வகையில், உ.பி.யின் 76-வது மாவட்டத்தை உருவாக்கி அதற்கு 'அட்டல் நகர்' எனப் பெயரிடப்பட உள்ளது. இவர் பிறந்த இடமான பத்தேஷ்வர், ஆக்ராவில் அமைந்துள்ளது.

உ.பி.யின் 76-வது மாவட்டம்  'அட்டல் நகர்' என்பதை அதிகாரபூர்வமாக உ.பி.யின் முதல்வரான யோகி ஆதித்யநாத் விரைவில் அறிவிக்க உள்ளார். இதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிந்து ஆக்ரா மாவட்ட வருவாய்துறை நிர்வாகத்தின் கருத்தைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி. மாநில அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''பத்தேஷ்வரை ஆக்ராவின் புதிய தாலுகாவாக அறிவிக்க அரசிடம் பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் கோரி வந்தனர். இதன் மக்களவைத் தேர்தலிலும் பெறும் வகையில் தற்போது மாவட்டமாகவே அறிவிக்கப்பட உள்ளது''  எனத் தெரிவித்தனர்.

புதிய மாவட்டமாக அமையவிருக்கும் அட்டல் நகரின் பரப்பளவு 1,250 சதுர கி.மீ. அளவில் அமைய உள்ளது. இது உ.பி.யின் சிறிய மாவட்டங்களான பதோஹி, ஷிராவஸ்தி, ஹாப்பூர் மற்றும் ஷாம்லி ஆகியவற்றை விடப் பெரிதாக இருக்கும். அட்டால் நகரின் மக்கள் தொகை சுமார் 7.5 லட்சமாக இருக்கும். ஆக்ராவில் இருந்து 14 கிலோ மீட்டரில் பாஹ அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x