Published : 08 Jan 2019 05:04 PM
Last Updated : 08 Jan 2019 05:04 PM

குடியுரிமை மசோதாவை இன்னும் மதச்சார்பற்றதாக்குங்கள்: திரிணமூல் வலியுறுத்தல்- காங்கிரஸ் வெளிநடப்பு

வடகிழக்கு மாநிலங்களில் முழுக் கடையடைப்பு நடைபெற்று வரும் நேரத்தில் குடியுரிமை (திருத்த) மசோதாவை செவ்வாயன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.

 

இந்த மசோதாவின்படி முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மைப் பிரிவினர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருன்து 31, டிசம்பர் 2014-க்கு முன் இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கு குடியுரிமைத் தகுதி உள்ளது என்று கூறுவதாகும்.  இந்த மசோதா மக்களவையில் விவாதத்தை முடுக்கி விட்டதோடு, காங்கிரஸ், திரிணமூல் எம்.பி.க்கள் வெளிநடப்பையும் தூண்டியுள்ளது.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. மொகமது சலீம் கூறும்போது, குடியுரிமை மதச்சார்புத் தன்மையுடன் வழங்கப்படுதல் கூடாது. மதம், மொழி ஆகியவை தேசம் என்ற கருத்தில் கொண்டு இணைக்கப் படக்கூடாதது. இது மசோதாவல்ல, இது தேர்தல் அறிக்கை போன்றதே, தேர்தல்கள் வருவதையடுத்து நாட்டை துண்டாடுகின்றனர். குடியுரிமை மதச்சார்புத் தன்மையுடன் அளிக்கப் படக்கூடாது.

 

சிவசேனா எம்.பி. கூறுவது என்ன?

 

சிவசேனா எம்.பி. அரவிந்த் கண்பது சாவந்த் கூறும்போது, மத்திய அரசு அசாம் மாநில பூர்வக்குடி மக்களிடமும், அசாம் கணபரிஷத் உடனும்  பேச வேண்டும்.  உள்நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்கவே சிவசேனா ஆரம்பிக்கப் பட்டது. இப்போது உலகமே எங்கள் தலைவர் பால்தாக்கரேவின் கருத்துகளை எதிரொலிக்கிறது. டோனால்ட் ட்ரம்ப் கூட பால்தாக்கரேயின் கருத்தையே எதிரொலிக்கிறார், என்று லோக்சபாவில் பேசினார்.

 

பாஜக எம்.பி. மீனாட்சி லேக்கி:

 

சட்டவிரோதக் குடியேறிகளால் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் தொகை அமைப்பே மாறிப்போயுள்ளது.  என்றார்.

 

பைஜோயா சக்ரவர்த்தி (பாஜக):

 

அஸாம் மாநிலம் பெரிய அளவில் சட்டவிரோத குடியேற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ளது.  இவர்களது புலம்பெயர்வினாலும், ஊடுருவலினாலும் அசாம் உள்நாட்டு மண்ணின் மைந்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்து வருபவர்கள் பணம் வைத்துள்ளனர், இதனால் இங்கு நிலம் வாங்க முடிகிறது.  இதனால் ஏழை உள்நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை இழக்கின்றனர். இப்படியே போனால் அஸாமில் அசாமியர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் அசாமில் இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது. சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு நிறைய குழந்தைகள் என்றார், இதற்கு எதிர்ப்பு எழுந்த போதிலும் தான் பெயர்களைக் கூட கூற முடியும் என்றார். காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x