Published : 08 Jan 2019 04:59 PM
Last Updated : 08 Jan 2019 04:59 PM

ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு

பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎம்எஃப் வரலாற்றிலேயே தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான்.

 

47 வயதான கீதா, அமெரிக்காவில் வசித்துவருகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியாகப் பணியாற்றியவர் கீதா கோபிநாத்.

 

முன்னதாக மாரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் என்பவர் ஐஎம்எஃப்பின் பொருளாதார ஆலோசகராகவும் ஆராய்ச்சித்துறையின் இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். அவரின் பதவிக் காலம் டிசம்பர் 31-உடன் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி கீதா கோபிநாத் பதவியேற்றுக் கொண்டார். 

 

இதுகுறித்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 1-ம் தேதி வெளியானது.

 

இதுகுறித்து அப்போது பேசிய ஐஎம்எஃப்  நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லகார்டே, உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் கீதாவும் ஒருவர். குறைகாண முடியாத கல்வித் தகுதி கொண்டவர். அறிவுசார்ந்த தலைமைப் பண்பை உடையவர். விரிவான சர்வதேச அனுபவம் கொண்டவர் என்று தெரிவித்தார்.

 

ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பதவியேற்கும் 11-வது நபர் கீதா கோபிநாத் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x