Published : 18 Dec 2018 08:23 AM
Last Updated : 18 Dec 2018 08:23 AM

ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது ‘பெய்ட்டி’ புயல்; 7 பேர் பலி, 6 மீனவர்கள் மாயம், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நாசம்

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே நேற்று மதியம் 3.50 மணிக்கு ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது.

‘கஜா’ புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான புயலுக்கு ‘பெய்ட்டி’ என பெயரிடப்பட்டது. இந்தப் புயல் மெல்ல நகர்ந்து, நேற்று மதியம் 12.45 மணிக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் கண்ட்ரினிகோனா பகுதியில் கரையை அடைந்தது. அப்போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பின்னர் காக்கிநாடா - ஏனாம் இடையே நேற்று மதியம் 3.50 மணிக்கு கரையை கடந்து, ஒடிசாவை நோக்கிச் சென்றது.

ஆந்திராவில் புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக் கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன.

விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட் டங்களில் சுவர் இடிந்து விழுந்தது மற்றும் மரங்கள் சாய்ந்த சம்ப வங்களில் இதுவரை 7 பேர் பலி யானதாக தெரியவந்துள்ளது. காக்கிநடாவிலிருந்து விசாகப் பட்டினம் கடற்பகுதிக்கு மீன் பிடிக் கச் சென்ற 6 மீனவர்களை காண வில்லை. அவர்கள் காற்றின் திசை யில் அடித்துச் செல்லப்பட்டிருக் கலாம் என அஞ்சப்படுகிறது.

கடல் சீற்றமும் நேற்று அதிகமாகவே காணப்பட்டது. விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கடல் சுமார் 5 முதல் 10 மீட்டர் வரை முன்னேறியது.

புயல் சின்னம் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங் களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் விசாகப்பட்டினம், காகுளம், விஜயநகரம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் விவசாயப் பயிர்கள் நாசம் அடைந்தன. இதில் கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்ததாக கூறப்படுகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். மின்வாரிய ஊழியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திராவின் 7 கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஆந்திர அரசு செய்து கொடுத்தது. ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருந்து.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல்வேறு ரயில் சேவைகளை தென்மத்திய ரயில்வே நேற்று ரத்து செய்தது. விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் எந்த விமானமும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. கட லோர 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றுடன், இன்றும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

முதல்வர் ஆலோசனை

புயல் பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

உயிரிழந்தோர் குடும்பத் தினருக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாட்கள் தங்கி, மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x