Published : 14 Dec 2018 08:10 AM
Last Updated : 14 Dec 2018 08:10 AM

திருந்தாத காங்கிரஸாரும் திருத்த முனையும் ராகுலும்!

காங்கிரஸ் வெற்றிபெறும் மாநிலங்களில் முதல்வர்களை டெல்லியிலிருந்து தீர்மானிக்கும் முறைக்கு முடிவுகட்ட விரும்புகிறார் ராகுல் காந்தி.

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வென்றிருக்கும் சூழலில், முதல்வர் பதவிக்கான போட்டி கட்சிக்குள் கடுமையாக நிலவுகிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களின் முடிவையும், கீழேயுள்ள கட்சி நிர்வாகிகளின் முடிவையும் கேட்டறிய டெல்லியிலிருந்து நிர்வாகிகளை அனுப்பியிருக்கிறார் ராகுல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்களோ, “தலைவர் ராகுல் முடிவெடுக்கட்டும்” என்று ஒரே கோரஸாகக் கூறியிருக்கிறார்கள். கடுப்பான ராகுல், ஒவ்வொருவராகத் தனித்தனியே அழைத்து அவர்களுடைய விருப்பத்தையும், தேர்வுக்கான காரணத்தையும் கேட்டு அனுப்பச் சொல்லியிருக்கிறார். கூடவே, ராகுல் எடுத்திருக்கும் முடிவு இந்தியாவில் இதுவரை எந்தக் கட்சித் தலைவரும் செய்யாதது. கட்சியின் மேல்நிலையிலிருந்து, கீழ்நிலை வரைக்கும் உள்ள நிர்வாகிகளிடம் அவர்களுடைய முதல்வர் தேர்வு யார் என்று கேட்டிருக்கிறார்.

கட்சி நிர்வாகிகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக செல்பேசி செயலியான ‘சக்தி’ மூலம் இதைத் தங்கள் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறார்கள் நிர்வாகிகள். “எங்கள் முடிவை வைத்துத்தான் முதல்வரைக் கட்சி மேலிடம் தீர்மானிக்கிறதோ, இல்லையோ; எங்களுடைய விருப்பத்துக்கும் மதிப்பளிப்பதே புதிய மாற்றம்” என்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x