Published : 13 Dec 2018 10:18 AM
Last Updated : 13 Dec 2018 10:18 AM

சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுத்த பாஜக: விவசாயிகள் அதிருப்தியே முக்கிய காரணம்

சத்தீஸ்கர் மாநிலத்தை 15 ஆண்டுகளாக தமது இரும்புப் பிடியில் பாஜக வைத்திருந்தது. மேலும், முதல்வர் ரமண் சிங் சத்தீஸ்கர் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார்.

அதுமட்டுமின்றி, அங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி பல வீனமான நிலையிலேயே இருந்துள்ளது. சொல்லிக்கொள்ளும்படி, அம்மாநிலத் தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால், இத்தனை பலவீனங்களை கடந்தும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற, பாஜகவே வழிவகுத்து கொடுத்ததாக அரசி யல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பாஜக, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. குறிப்பாக, நெல்லுக்கு ஆதரவு விலையை உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை பாஜக கண்டுகொள்ளாதது விவசாயிகளிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்ற காரணங்களால், ஆளுங்கட்சியின் மீது மக்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகவே அதிருப்தி அலை வீசியது. அதே சமயத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், மக்களின் இந்த அதிருப்தி மனநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. முக்கியமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களை விட சத்தீஸ்கரில்தான் அதிக முறை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். இது, காங்கிரஸ் கட்சி மீது மக்களின் நம்பகத்தன்மையை அதிகரித்தது.

இதுவே, சத்தீஸ்கரில் பலவீனமான நிலையில் இருந்த காங்கிரஸ், பலம் மிக்கதாக மாறி அமோக வெற்றி பெற காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பதவிக்கு அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூபேஷ் பாகல் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் டி.எஸ். சிங் தேவ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x