Published : 13 Dec 2018 09:38 AM
Last Updated : 13 Dec 2018 09:38 AM

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி; ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்: புதிய முதல்வர்களை ராகுல் காந்தி இன்று முடிவு செய்வார்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியது. எனினும், முதல்வர் யார் என்பது குறித்து கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவிக்க உள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியும் (டிஆர்எஸ்), மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் (எம்என்எப்) வெற்றி பெற்றது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங் களில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மத்தியப் பிரதேசத்தின் 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங் களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இதன்படி, காங்கி ரஸுக்கு 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. இந்நிலையில், 2 இடங்களில் வென்ற பகுஜன் சமாஜ், 1 இடத்தில் வென்ற சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தன. இதுபோல 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதர வளிக்க உள்ளதாகக் தெரிகிறது.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று வெளி யிட்ட அறிக்கையில், “காங்கிரஸின் கொள்கைகளில் எங்களுக்கு உடன் பாடு இல்லை. எனினும், பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற் காக காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம்” என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத், திக் விஜய சிங், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் ஆளுநர் ஆனந்தி பென் படேலை நேற்று நேரில் சந் தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு 121 உறுப் பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர்கள் ஆளுநரிடம் தெரி வித்தனர்.

கமல்நாத்துக்கு வாய்ப்பு

தலைநகர் போபாலில் காங் கிரஸ் மேலிட பார்வையாளர் ஏ.கே.அந்தோனி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில், ‘முதல்வர் யார் என்பதை கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார்’ என ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் மற்றும் மற்றொரு மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. எனினும், கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

முன்னதாக, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கமல்நாத்துக்கு வாழ்த்துகள்” என்றார்.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் 99 தொகுதி களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதன் கூட் டணி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஆளும் பாஜகவுக்கு 73 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதர கட்சிகள் 27 இடங்களில் வென்றன.

ராஜஸ்தானில் யார்?

இதையடுத்து, காங்கிரஸ் கட்சி யின் மேலிட பார்வையாளர் கே.சி.வேணுகோபால் தலைமை யில் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் வரை தேர்வு செய்வது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும், முதல்வர் வேட்பாளரை ராகுல் காந்தி தேர்வு செய்வார் என ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவினாஷ் பாண்டே, கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் நேற்று மாலையில் ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்க மானவருமான சச்சின் பைலட்டுக் கும் இடையே கடும் போட்டி நிலவு கிறது. இதனால் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இன்று ராகுல் காந்தி இறுதி முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 68 இடங் களில் வெற்றி பெற்றும் ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு வெறும் 15 இடங்களும் பகுஜன் சமாஜ் கூட் டணிக்கு 7 இடங்களும் கிடைத்தன. மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங்தேவ் ஆகிய இருவரில் ஒருவர் முதல்வ ராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x