Published : 08 Dec 2018 08:47 AM
Last Updated : 08 Dec 2018 08:47 AM

இணையதளத்தை கலக்கும் பாடும் கழுதை

குயில் பாடும், கழுதை பாடுமா? பாடும்... மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பெண் கழுதை பாடுகிறது. அதுதான் இப்போது இணையதளத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சாலையில் பெண் கழுதை ஒன்று குட்டி போட்டது. ஆனால், குட்டி இறந்துவிட்டது. அந்த சோகத்திலும் உடல்நல பாதிப்பிலும் நிற்க கூட முடியாமல் இருந்தது அந்தக் கழுதை. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘ரெஸ்க்’ அறக்கட்டளையின் தகவல் தொடர்பு குழுவைச் சேர்ந்த டீனா மோகன்தாஸ் அதைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தார். உடனடியாக ரெஸ்க் அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவித்தார்.

அறக்கட்டளையைச் சேர்ந்தவர் கள் உடனடியாக விரைந்து சென்று, அந்தக் கழுதையை மீட்டு சிகிச்சை அளித்தனர். தற்போது அது நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளது. அதற்கு ‘எமிலி’ என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து டீனா கூறும்போது, ‘‘முதலில் மனிதர்கள், மற்ற விலங்குகளை எமிலி விரும்ப வில்லை. குட்டி இறந்த சோகம் மற்றும் உடல் வலியில் இருந் தது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். தற்போது மற்ற கழுதைகளுடன் சகஜ மாகப் பழகுகிறது. அதைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக் கும் வகையில் சந்தோஷத்தில் அவ்வப்போது பாடுகிறது’’ என்கிறார்.

சமீபத்தில் அயர்லாந்தில் ‘ஹரியட்’ என்ற பெண் கழுதை பாடும் வீடியோவை உள்ளூர்காரர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது வைரலானது. தற்போது ‘எமிலி’ வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.

‘ரெஸ்க்’ அறக்கட்டளை தலைவர் நேஹா பஞ்சமியா கூறும்போது, ‘‘சில கழுதைகள் பாடுவது எதனால் என்று மருத்துவரீதியாகவோ அறிவியல் பூர்வமாகவோ விளக்க இயலாது. ஆனால், மகிழ்ச்சியாக இருக்கும் போது குரலை மாற்றி அப்படி செய்கின்றன. ‘எமிலி’க்கு திண்பது மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்த திண்பண்டத்தை யாராவது கொடுத்தால், நன்றி தெரிவிக்கவும் அன்பை வெளிப்படுத்தவும் வித்தியாசமான குரலில் சில விநாடிகள் பாடும்’’ என்கிறார்.

கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, ‘‘எல்லா விலங்கு களும் ஏதாவது ஒரு வகையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கின்றன. மகிழ்ச்சியான நேரங்களில் குதிரை துள்ளி குதிக்கும், ஓடும். நாய்கள் இங்கும் அங்கும் சுற்றிச் சுற்றி வரும். எமிலியைப் பொறுத்த வரையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இப்படி பாடுவது போல் செய்கிறது’’ என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x