Published : 19 Nov 2018 02:26 PM
Last Updated : 19 Nov 2018 02:26 PM

சர்ச் நடைமுறைகளைப் பின்பற்றும் இந்து கோயில்கள்: மத நல்லிணக்கத்தில் கைகுலுக்கிக் கொள்ளும் மிசோரம்

தமிழ் சினிமா பாடல் ஒன்றில் வரும் ''தாஜ்மகாலின் காதிலே ராம காதை கூறலாம். மாறும் இந்த உலகிலே மதங்கள் ஒன்று சேரலாம்....'' என்பதுபோல காலம மாற மாற மத நல்லிணக்கமும் மக்களிடையே கலந்து வருவதைக் காண முடிகிறது.

கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மிசோராம் மாநிலத்தில் சில இந்துக் கோயில்கள் தேவாலயங்களைப் போலவே செயல்படுகின்றன. ஆனால் இந்துக் கடவுள்களின் வழிபாடுதான் இங்கு. மத்திய கூர்கா ஆலயக்குழு 13 கோயில்களை நிர்வகிக்கிறது. இதில் 5 கோயில்கள் மிசோரம் தலைநகரான ஆய்ஸவாலிலேயே உள்ளன. இங்கு மேலே பிரார்த்தனைக் கூடம் என்றால் கீழே சமுதாயக்கூடமாகச் செயல்பட்டு வருகிறது,

இக்கோயில்களில் கடைபிடிக்கப்படும் சடங்குகள் அனைத்தும் ஒரேமாதிரியாக உள்ளன.

குறைந்தபட்சம் சுற்றிலுமுள்ள கோயில்களின் அட்டவணையையே நடைமுறைப்படுத்துகின்றன. இவ்வாறுதான் அங்குள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக் கூட்டங்கள் அமைகின்றன. இதில் முதன்மையானது ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாராந்திர விடுமுறை வசதி. அதேநேரம் கலந்துகொண்டே ஆக வேண்டும் எந்தவிதக் கட்டாயமுமில்லை.

'துவாம்பூய் முல்கோ வெங்' என்ற ஊரில் 120 கூர்கா குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ஓம் மந்திர் ஆலயத்தின் அருகிலேயே வசிக்கும் கமிட்டியின் தலைவர் உதய்குமார் இதுகுறித்து தெரிவிக்கையில், ''ஒழுக்கமும் நேர்மறையான தாக்கம் பெறமுடியுமென்றால் இன்னொரு மதம் மூலமாக ஊக்கம் பெறுவதில் எந்தவித தீங்கும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு குடும்பத்தினரும் முறை வைத்துக்கொண்டு தங்கள் வீட்டிலிருந்து பிரசாதங்கள் செய்து கொண்டுவந்து பக்தர்களுக்குத் தருகின்றனர்.

பெரும்பாலும் சூஜி அல்வா அல்லது பழங்களைத் துண்டுதுண்டாக நறுக்கிக் கொண்டுவந்து தருவார்கள். கடந்த வாரம் நவம்பர் 11 அன்று பாரத் ஜோஷி குடும்பம் பிரசாதம் வழங்கியது. இந்த ஞாயிற்றுக்கிழமை குமார் சேத்ரி முறை'' என்றார்.

இதில் பெரியவர்களைவிட குழந்தைகளின் வருகை உற்சாகம் அளிப்பதாக உள்ளது. சமைரா ஜோஷி எனும் சிறுமிக்கு வயது 9. ஓம் மந்திர் ஆலயத்தின் ஞாயிறு வகுப்பில் கலந்துகொள்ளும் 40 குழந்தைகளில் அவரும் ஒருவர்.

இதுபற்றி சமைரா தெரிவிக்கையில், ''பள்ளிகளில் படிக்கும் எனது மிசோ நண்பர்கள் சர்ச்சில் நடக்கும் தங்கள் ஞாயிறு வகுப்பு குறித்துப் பேசுவார்கள். நானும் இப்போது இந்துக்கோவில்களில் நடக்கும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போகத் தொடங்கியுள்ளேன். இப்போது நானும் அதில் கலந்துகொண்டது பற்றி அவர்களுக்கு இணையாக பேச முடியும்.'' என்றார்.

தனது ஞாயிறு வகுப்பின் ஆசிரியை ரீட்டா கிரி கூறும் ராமாயண மற்றும் மகாபாரதக் கதைகள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியை ரீட்டா கிரி கூறுகையில், "ஒவ்வொரு நாளும் நாம் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் கவனத்தோடும், உண்மையாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். 'ஞாயிறு சங்கத்' தில் (ஒன்றுகூடுதல்)  ஒரு சிறுமி வருகிறாள். அவள் பெயர் ஷப்னம் ஜாய்ஷி, அவள் வாசிக்கும் டோலக் இசையில் பிரார்த்தனை கூடமே உலகை மறந்து ஒன்றிவிடும்'' என்றார்.

கோயில் பூசாரி பிஷ்ணு பிரசாத் சுபேதி  கூறுகையில், ''கிறிஸ்தவ தோத்திரப் பாடல்களின் புத்தகம் போன்று இங்கும் உள்ளது. இந்து கோயில்களில் பாடப்படும் பஜனைகளின் கீர்த்தனைகளும் ஸ்லோகங்கள் இதில் உள்ளன. எல்லாவற்றையும் மனப்பாடம் செய்ய இயலாதவர்களுக்கு இந்த கையடக்கப் புத்தகம் மிகவும் எளிதானகும்'' என்று தெளிவுபடுத்தினார்.

கடைசியாக, ''இந்துக்களைச் சேர்ந்தவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் முறையும் இங்கு ஏற்பட்டுள்ளது. அவர்களின் இறுதிச் சடங்குகளில் இறந்தவரின் நலம் விரும்பிகள் ஒன்றுகூடி இந்து தெய்வத்தின் பஜனைப் பாடல்களைப் பாடுகின்றனர். ஒருவகையில் கிறிஸ்தவ சமுதாயத்தில் நல்ல பண்புகளில் ஒன்றிலிருந்து இது பெறப்பட்டுள்ளது'' என்றார் சேத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x