Last Updated : 13 Oct, 2018 11:50 PM

 

Published : 13 Oct 2018 11:50 PM
Last Updated : 13 Oct 2018 11:50 PM

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஹெச்ஏஎல் ஊழியர்கள் உரிமை பறிப்பு: பெங்களூரு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் ஊழி யர்களின் உரிமை பறிக்கப்பட் டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் போர் விமா னங்கள் வாங்குவதற்காக போடப் பட்ட ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலில் ஈடுபட்டிருப்ப தாகவும் இந்த விமானங்களை தயா ரிக்க பெங்களூருவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல்-க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட்டு, விமான உதிரிப் பாக தயாரிப்பில் முன் அனு பவம் இல்லாத ரிலையன்ஸ் நிறு வனத்துக்கு வழங்கியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

ஊழியர்களுடன் சந்திப்பு

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெச்ஏஎல் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர் களை சந்திக்க நேற்று பெங்களூரு வந்தார். அரசு பணியாளர்களாக இருப்பதால் பெரும்பாலான தொழி லாளர் சங்கங்கள் அவருடனான சந்திப்பை தவிர்த்தன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள், 50-க்கும் குறைவான இந்நாள் ஊழியர்கள் ராகுல் காந்தி யுடனான சந்திப்பில் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது மூத்த அதிகாரிகள் நிறுவனத்தின் நிலை குறித்தும், ரஃபேல் விவகாரம் குறித்தும் ராகுல் காந்தியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து ராகுல் காந்தி பேசியதாவது:  நான் இங்கு உங் களை அணி சேர்க்கவோ, அரசியல் பேசவோ வரவில்லை. ஹெச்ஏஎல் என்பது சாதாரண நிறுவனம் அல்ல. எதிர்கால இந்தியாவுக்கான வியூகத்தை வகுக்க பயன்படுத் தப்பட்ட முக்கியமான சொத்து. சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பாதுகாப்புக்காகவும், விண்வெளி ஆராய்ச்சிக்காகவும் சர்வ தேசத்தின் முன்பாக பெருமிதத்தோடு அடை யாளம் காட்டப்பட்ட சொத்து.

நாட்டின் வளர்ச்சிக்காக மிகப் பெரிய சாதனைகளையும், சேவை களையும் செய்திருக்கிறது. இதற் காக  நிறுவன ஊழியர்களுக்கு நாட்டு மக்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்நிறுவனம் மிக சிறப்பான சேவையை நாட்டுக்கு வழங்கும் என நம்புகிறேன். எனவே நிறுவன ஊழியர்களுடன் எப்போதும் கைகோத்திருக்க விரும்புகிறேன்.

உரிமை பறிப்பு

இந்நிறுவனத்தை பாதுகாப்பதற் காகத்தான் ரஃபேல் விவகாரத்தை வெளிப்படையாக பேசி வருகி றோம். சட்ட விதிமுறைகளின்படி,  இந்த நிறுவனத்துக்கு வழங்கப் பட்ட ஒப்பந்தத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பறித்திருக்கிறது. அதனை விமான உதிரி பாக தயாரிப்பில் முன் அனுபவம் இல்லாத தனது நண்பர் அனில் அம்பானியின் நிறுவனத் துக்கு பரிசாக அளித்திருக்கிறார். இதன் மூலம்  ஹெச்ஏஎல் ஊழி யர்களின் உரிமையைப் பறித் திருக்கிறார். இந்த விவகாரத்தை நாட்டு மக்களும், நானும் எளிதில் விட மாட்டோம்

இவ்வாறு அவர் பேசினார்.

குமாரசாமியுடன் சந்திப்பு

முன்னதாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசின் செயல்பாடு, அமைச்சரவை விரி வாக்கம், இடைத்தேர்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டதாக தெரிகிறது.

தேர்தல் ஆலோசனை

பின்னர் ராகுல் காந்தியை துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது வருகிற நவம்பர் 3-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பட்டியல் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x