Published : 05 Oct 2018 11:47 AM
Last Updated : 05 Oct 2018 11:47 AM

ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து

 

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனை புறக்கணித்து, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட உள்ளனர்.

தரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணை களை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட் டுள்ளது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட் டுள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

ரஷ்யா, ஈரான், வடகொரியாவுடன் ஆயுதக் கொள் முதல் உட்பட வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்டம் (சிஏஏடிஎஸ்ஏ) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரஷ்யாவுடன் எவ்வித வர்த்தக உறவையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என நட்பு நாடுகளை வலியுறுத்தி உள்ளோம். இதை மீறும் நாடுகள் மீது புதிய சட்டத்தின்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஏவுகணையை வாங்க இந்தியா உறுதியாக உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் தனியாக சந்தித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது இரு நாடுகளுக் கிடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, எஸ்-400 ஏவுகணை கொள் முதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x