Published : 05 Oct 2018 09:16 AM
Last Updated : 05 Oct 2018 09:16 AM

இந்தியர்களைத் துரத்தும் மாரடைப்பு!

மாரடைப்பின் காரணமாக மரணமடைபவர்கள் இந்தியாவில் அதிகம் என்கிறது மாரடைப்பு தொடர்பான சர்வதேச ஆய்வு. இந்தியாவில் மாரடைப்பால் ஆண்டுதோறும் 80 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை மரணமடைகிறார்கள். இதய நோய் கண்டறியப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு 23% பேர் மரணமடைகிறார்கள். ஓராண்டுக்குள் 46% இறந்துவிடுகிறார்கள். இதய நோயால் இறக்கும் இந்தியரின் சராசரி வயது 59. உடற்பயிற்சி அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். சர்க்கரை கலந்த பானம், பழரசங்களைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர், இனிப்பு சேர்க்காத பழரசம் குடிக்க வேண்டும் என்பதும் முக்கியம். அலுவலகத்திலும் வீட்டிலும் உட்கார்ந்தே இருக்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்துகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x