Published : 05 Oct 2018 08:35 AM
Last Updated : 05 Oct 2018 08:35 AM

சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் வழக்கில் ஆதாரங்களின் நகல்கள் சசி தரூரிடம் தரப்பட்டுள்ளன: நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தகவல்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரை கொடுமைப்படுத்திய தாகவும் தற்கொலைக்கு தூண்டிய தாகவும் சசி தரூர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 498ஏ மற்றும் 306-ன் கீழ் சசி தரூருக்கு எதிராக கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சசி தரூர் கைது செய்யப்படவில்லை. அவருக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் சசி தரூர் கோரிக்கையை ஏற்று, குற்றப் பத்திரிகையுடன் தாக்கல் செய் யப்பட்ட பல்வேறு ஆவணங்களின் நகல்களை (சாட்சிகளின் வாக்கு மூலம் உட்பட) அவரிடம் வழங்கு மாறு டெல்லி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அனைத்து ஆதாரங்களின் நகல்களும் சசி தரூரிடம் தரப்பட்டுள்ளதாகவும் இவை எலெக்ட்ரானிக் மற்றும் ஆவண ஆதாரங்கள் என்றும் நீதி மன்றத்தில் போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஆவணங்களை சரிபார்க்க அவகாசம் வழங்குமாறு சசி தரூரின் வழக்கறிஞர் கோரி னார். இதை நீதிபதி சமர் விஷால் ஏற்றுக்கொண்டு 1 வாரம் அவகாசம் வழங்கினார். வழக்கை வரும் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x