Last Updated : 05 Oct, 2018 08:33 AM

 

Published : 05 Oct 2018 08:33 AM
Last Updated : 05 Oct 2018 08:33 AM

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழல் ஆய்வை ஊக்கப்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச் சூழல் தொடர்பான ஆராய்ச்சிகள், புதுமைகளை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வலி யுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடியின் கருத்துகள், சில நாளிதழ்களில் கடந்த புதன்கிழமை பிரசுரிக்கப்பட்டன. அதில் பிரதமர் மோடி கூறியிருப்ப தாவது:

தற்போது சுற்றுச்சூழல் பாது காப்பு மிகப்பெரும் சவாலாக உள்ளது. சுற்றுச்சூழல் குறித்து எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மக்கள் அதிகமாக பேச வேண்டும், எழுத வேண்டும், விவாதிக்க வேண்டும். கேள்விகள் எழுப்ப வேண்டும். அதேநேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய ஆராய்ச்சிகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் புதுமைகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து மக்களிடம் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மனிதர்களுக்கும் இயற்கைக் கும் மிகச்சிறப்பான தொடர்புள்ளது. முதல் மனித நாகரிகம் நதிக்கரை யோரங்களில்தான் தொடங்கி உள்ளன. இயற்கையுடன் ஒன்றி வாழும் சமூகங்கள், வளமாகவும் செழிப்பாகவும் இருக்கின்றன. அந்த வழியை பின்பற்றினால், நாம் மட்டுமன்றி நமது அடுத்த தலைமுறையினரும் இந்த பூமியில் நலமுடன் வாழ்வார்கள். ஆனால், நமது பேராசை, தேவைகள் சுற்றுச் சூழல் விஷயத்தில் ஏற்றத்தாழ்வு களை உருவாக்கி விட்டது. இதை வழக்கம் போல் ஏற்றுக் கொள் வதும், அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க நட வடிக்கை எடுப்பதும் மக்கள் கையில் உள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து பேசும் அதேவேளையில், பருவ நிலை நீதி குறித்தும் நாம் பேச வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்றத்தால் ஏழைகள், நலி வடைந்த பிரிவினர்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பருவநிலை நீதி என்பது ஏழைகளின் உரிமை, உணர்வுகளைப் பாதுகாப்பதாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, எனக்கு ஐ.நா. விருது வழங்கி உள்ளதை பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்த விருது தனிப்பட்ட முறையில் என் ஒருவனுக்கு வழங்கப்பட்டதாக நினைக்கவில்லை. இயற்கையை மதித்து வாழும் இந்திய கலாச் சாரத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x