Published : 05 Oct 2018 08:29 AM
Last Updated : 05 Oct 2018 08:29 AM

புரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்

புரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிய டாக்டர்கள் 3 பேருக்கு உத்தர பிரதேச உயர் நீதிமன்றம் தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

உத்தரபிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் கடந்த வாரம் அடிதடி தொடர்பான 3 கிரிமினல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் காயமடைந்தவர்கள் தொடர்பாக சீதாபூர், உன்னாவ், கோண்டா மாவட்ட மருத்துவமனைகளின் டாக்டர்கள் தனித்தனியே மருத்துவ அறிக்கைகள் எழுதியிருந்தனர். அவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மருத்துவ அறிக்கையில் என்ன எழுதியுள்ளது என்பதை படிக்க முடியவில்லை அந்த அளவுக்கு மோசமான கையெழுத் தில் இருந்தன. இதனால், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அஜய் லம்பா, நீதிபதி சஞ்சய் ஹர்காலி ஆகியோர் அதிருப்தி அடைந்தனர். 3 டாக்டர்களுக்கும் சம்மன் அனுப்பினர்.

விசாரணைக்கு ஆஜரான அந்த 3 டாக்டர்களும் வேலைச்சுமை காரணமாக தெளிவாக எழுத முடியவில்லை என்று தெரி வித்தனர். அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

மருத்துவ அறிக்கை படிக்க முடியாதபடி இருப்பதால் இது விசாரணைக்கு தடையாக இருப்பதாவும் சட்டரீதியான மருத்துவ அறிக்கைகள், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கூட படிக்க முடியாத வகையில் டாக்டர்கள் எழுதுவதால் அவற்றின் நோக்கமே நிறைவேறுவ தில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

புரியாத வகையில் எழுதிய டாக்டர்கள் 3 பேருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்தும் அந்தத் தொகையை நீதிமன்ற நூலகத்தில் செலுத்தும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எதிர்காலத்தில் மருத்துவ அறிக்கைகள் தெளிவாக எழுதப்பட வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கைகளை கம்யூட்டர் மூலம் டைப் செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x