Published : 05 Oct 2018 08:02 AM
Last Updated : 05 Oct 2018 08:02 AM

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது; பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் அமெரிக்க டால ருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு சரிந்து வருவதா லும் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.59-ம், டீசல் விலை ரூ.6.37-ம் அதி கரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84-க்கும் டீசல் ரூ.75.45-க் கும் விற்கப்பட்டது. சென்னை யில் நேற்று ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.87.33, டீசல் ரூ.79.89, மும்பையில் பெட்ரோல் ரூ.91.34, டீசல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் காய் கறிகள், பழங்கள், பால் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. தனியார் பஸ், ஷேர் ஆட்டோக்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று முன்தினம் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலால் வரி குறைப்பு

இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ரூ.1.50-ஐ மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ் தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயை குறைக்க முடிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படுகிறது.

இதேபோல அந்தந்த மாநில அரசுகள், வாட் வரியில் ரூ.2.50-ஐ குறைக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள் ளோம். இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக் கும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவ தால் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.10,500 கோடி இழப்பு ஏற்படும். ஓராண்டுக்கு ரூ.21,000 கோடி இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

ரூ.5 விலை குறைந்தது

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பாஜக ஆளும் மாநிலங் களான மகாராஷ்டிரா, குஜ ராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், திரிபுரா, மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஹரி யாணா, உத்தர பிரதேசம், அசாம் மாநில அரசுகள், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற் றுக் கொண்டுள்ளன. இதன் காரணமாக அந்த மாநிலங் களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைந்துள்ளது.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி கூறியபோது, "அரசின் உத்தரவு நகலை பார்த்த பிறகு பிஹாரில் முடிவு எடுக்கப் படும்" என்று தெரிவித்தார்.

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியபோது, "மாநில அரசு வாட் வரியை ரத்து செய் யாது" என்று தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் குமார சாமி கூறியபோது, "ஏற் கெனவே நாங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் ரூ.2 குறைத்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.

ஆந்திராவிலும் ஏற்கெ னவே பெட்ரோல், டீசல் ரூ.2 விலை குறைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் முடிவை அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு வரவேற் றுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளரின் சிரமத் தைக் குறைக்கும் என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x