Last Updated : 04 Oct, 2018 09:44 AM

 

Published : 04 Oct 2018 09:44 AM
Last Updated : 04 Oct 2018 09:44 AM

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி; கோதுமை குவிண்டால் ரூ.1,840 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தையடுத்து கோதுமை யின் குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ரூ.1,840 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் செல்லமுத்து, தென் இந்திய கரும்பு விவசாய சங்கத்தலைவர் ராஜ்குமார். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயப் பிரிவு நிர்வாகி பசுமை வளவன் ஆகியோருடன் தமிழகத்தைச் சேர்ந்த 300 விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டம் முடிந்தது

அனைவரும் நேற்று டெல்லிக் குள் நுழைந்த பின்னர் ராஜ்காட்டின் அருகிலுள்ள கிஸான் காட்டுக்குச் சென்றனர். அங்கு முன்னாள் பிரதமர் சரண்சிங் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாரதிய கிஸான் யூனியன் செய்தி தொடர்பாளர் யூத்வீர்சிங் கூறும்போது, ‘எங்கள் 11 கோரிக்கைகளில் 7 கோரிக்கை களை மட்டுமே அமைச்சர் ராஜ்நாத் ஏற்றுக்கொண்டார்.

எனவே, இந்த பேச்சுவார்த்தை யில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனினும் இன்று (புதன்கிழமை) எங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். இதன்மீது மற்ற விவசாய சங்கங்களுடன் கூடிப்பேசி மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்த அடுத்த கட்ட முடிவு எடுப்போம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x