Last Updated : 28 Sep, 2018 08:32 AM

 

Published : 28 Sep 2018 08:32 AM
Last Updated : 28 Sep 2018 08:32 AM

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழு ஆதரவுடன் எனது ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல் ஏக்கள் அனைவரின் ஆதரவும் இருப்பதால் எனது தலைமையி லான கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறினார்.

இதுகுறித்து குமாரசாமி நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் எனது தலைமை யிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி மிகச் சிறப்பாக நடந்துவரு கிறது. இதனைத் தடுக்க பாஜக தலைவர்கள் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டி வருகிறார் கள். மீண்டும் முதல்வராகி விட வேண்டும் என பாஜக தலைவர் எடியூரப்பா முயன்று வருகிறார். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது. காங்கிரஸ் எம்எல்ஏக் கள் 18 பேர் என் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனை வரின் ஆதரவும் எனக்கு இருப்ப தால் எனது ஆட்சி 5 ஆண்டு களுக்கு நீடிக்கும். இதில் யாருக் கும் சந்தேகம் வேண்டாம். எனது ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளிக் குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி எம்எல் ஏக்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அக்டோபர் முதல் வாரத்தில் அமைச்சரவை விரிவாக் கம் நடைபெற வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் நிதிப் பங்கீடு செய்வ‌தில் நான் எந்த பாரா பட்சமும் காட்டுவதில்லை. ஒட்டு மொத்த கர்நாடக மக்களும் பயனடைய வேண்டும் என்பதற் காகவே திட்டங்களைத் தீட்டி வருகிறேன். என் மீது கட்சி சார்ந்தோ, சாதி சார்ந்தோ ஊட கங்கள் விமர்சிக்க கூடாது. கர்நாடகாவில் நிலையான ஆட்சி நடைபெற எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் மூலம் மீண்டும் முதல்வராக சித்தராமையா முயற்சிப்பதாகவும், ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும் முதல்வர் குமாரசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x