Last Updated : 24 Sep, 2018 08:14 AM

 

Published : 24 Sep 2018 08:14 AM
Last Updated : 24 Sep 2018 08:14 AM

விநாயகர் சதுர்த்தி விழா மும்பையில் நிறைவு- சிலைகள் கடலில் கரைப்பு

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நேற்று காலை முதல் கடலில் கரைக்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலா கலமாக 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நேற்று 11-வது நாளான தால் மும்பை நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடல் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு கரைக்கப் பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட னர். இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நீடித்தது.

விநாயகர் சிலைகளை பக்தர் கள் நீண்ட தூரம் ஊர்வலமாக கடற்கரை பகுதிக்குக் கொண்டு வந்தனர். அங்கு கிரேன்கள் மூலம் சிலைகள் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட் டத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந் தனர். வாத்தியங்களை இசைத்த வாறு அவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

மும்பையில் வைக்கப்பட் டிருந்த புகழ்பெற்ற லால்பஹுச்சா ராஜ கணபதி சிலை, நேற்று காலையே கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட் டது.

மும்பையின் கிர்காம் சவுபட்டி, ஜுஹு, பொவாய் ஏரி, தாதர் சவுபட்டி பகுதிகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதே போல புனே, நாசிக், சோலாப்பூர், கோலாப்பூர், அவுரங்காபாத், நான்டெட், ஜல்காவோன், அமரா வதி, நாக்பூர் பகுதிகளிலும் விநாய கர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x