Last Updated : 23 Sep, 2018 08:33 PM

 

Published : 23 Sep 2018 08:33 PM
Last Updated : 23 Sep 2018 08:33 PM

இந்தியர்களின் மது குடிக்கும் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு: உலக சுகாதார மையம் தகவல்

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் மது குடிக்கும் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு தனி நபர் ஒருவர் கணக்கின்படி 2.4 லிட்டர் மது குடித்த இந்தியர்கள், 10 ஆண்டுகளில் உயர்ந்து, 5.7 லிட்டராக அதிகரித்துள்ளது, ஆண்கள் 4.2 லிட்டரும், பெண்கள் 1.5லிட்டரும் மது அருந்துகின்றனர்.

இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

சர்வதேச அளவில் தனிமனிதர்கள் மது குடிக்கும் அளவு கடந்த 2000 முதல் 2005 வரை நிலையான அளவிலும் அதன்பின் அதிகரித்து 2016-ம் ஆண்டு நிலவரப்படி 6.4 லிட்டராக இருக்கிறது.

2025-ம் ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மது குடிக்கும் அளவு மேலும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் மது குடிக்கும் அளவு அதிகரிக்கும். இந்தியாவில் 2.2 லிட்டராக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுப்பழக்கத்தால், கடந்த 2016-ம் ஆண்டில் உலக அளவில் ஆண்டுதோறும் 30 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு தனிமனிதர்கள் மது குடிக்கும் அளவு 2.4 லிட்டராக இருந்தது. இது 2016-ம் ஆண்டு 5.7 லிட்டராக அதிகரித்துவிட்டது. இதில் பெண்கள் 1.5 லிட்டர் மதுவும், ஆண்கள் 4.2 லிட்டர் மதுவும் குடிக்கின்றனர்.

மதுவால் கருத்தரித்தல், குழந்தை பிறப்பில் பாதிப்பு, தொற்றுநோய்கள், தொற்று அல்லாத நோய்கள், மனநல பாதிப்பு, காயங்கள், விஷம் அருந்துதல் போன்ற நேரடியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் மதுவால் இறப்பவர்கள் எண்ணிக்கை 2.60 லட்சமாக இருக்கிறது. உலகளவில் நாள் ஒன்றுக்கு மதுவால் மட்டும் 6 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் சாலை விபத்துக்களில் இறப்பவர்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதுபால் பாதிப்பட்டு இந்த விபத்துக்களைச் சந்திக்கிறார்கள்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x