Published : 23 Sep 2018 08:11 AM
Last Updated : 23 Sep 2018 08:11 AM

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறும் வகையிலான மருத்துவக் காப்பீடு திட்டம் இன்று தொடக்கம்: தமிழகம் உட்பட 31 மாநிலங்களில் அமல்; 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் உட்பட 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

புதிய திட்டத்தில் ஒரு குடும்பத் தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள்.

மத்திய அரசின் இந்த முன்னோ டித் திட்டத்துக்கு, `பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்' என்று பெய ரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தனியார் மருத்துவமனை களிலும் பயனாளிகள் சிகிச்சை பெறலாம்.

வயது வரம்பு இல்லை

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் தொழிலாளர் களின் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைவார்கள். கடந்த 2011-ம் ஆண்டு சமூகப் பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் கிராமப்புறங்களில் 8.03 கோடி குடும்பங்களும் நகர்ப் புறங்களில் 2.33 கோடி குடும் பங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப் படும். இதன் மூலம் சுமார் 50 கோடி பேர் பலனடைவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. வயது வரம்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பின்றி ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

சில மாநிலங்களில் `ராஷ்ட்ரிய ஸ்வஸ்தய பீமா யோஜனா' என்ற பெயரில் ஏற்கெனவே மருத் துவக் காப்பீடு திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மத் திய அரசின் திட்டத்தின் கீழ் வருவார்கள்.

தமிழகத்தில் அமல்

தமிழகத்தில் முதலமைச்சர் விரி வாக மருத்துவக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது.

தமிழகம் உட்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு திட்டத்தில் இணைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தெலங் கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இது வரை இதில் கையெழுத்திட வில்லை. எனவே இந்த மாநிலங் கள் நீங்கலாக பிற மாநிலங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரு கிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்க உள்ள நிலையில், அடுத்த 2 மாதங் களில் இந்த திட்டம் முழுமையாக நடை முறைக்கு வரவுள்ளது.

ஆதார் அவசியமில்லை

இத்திட்டத்தில் பலனடைய ஆதார் அட்டை கட்டாயமில்லை. ஆதார் அட்டை இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை மூலம் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்.

ஒருவர் சிகிச்சைக்காக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டால் அவரது குடும்பத்தினர் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவை யில்லை. புற்றுநோய் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, கீமோ தெரபி, இதய அறுவை சிகிச்சை, நரம்பு அறுவை சிகிச்சை, தண்டுவடம், பல், கண் அறுவை சிசிச்சை என 1,350 சிகிச்சைகளை இத்திட்டம் கொண்டுள்ளது.

தேசிய சுகாதார ஏஜென்சி (என்எச்ஏ) இந்த திட்டத்துக்கு என இணைய தளமும் (mera.pmjay.gov.in ) ஹெல்ப் லைன் வசதியும் (14555) ஏற்படுத்தியுள்ளது. இவற் றின் மூலம் ஒருவர் இத்திட்டத்தின் பயனாளியா என்பதை பரி சோதித்துக் கொள்ள முடியும்.

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அவர் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

ரூ.3,500 கோடி செலவு

இத்திட்டத்தின் முதன்மை வடி வமைப்பாளரான நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறும் போது, “அரசால் செயல்படுத்தப் படும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் இதுவாகும். பிரதமர் மோடி தற்போது தொடங்கி வைத்தாலும் பண்டிட் தீனதயாளு உபாத்யாய பிறந்த நாளான செப்டம்பர் 25-ம் தேதி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். 15 ஆயிரம் மருத்துவமனை கள் இதில் தங்களை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள் ளன. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.3,500 கோடி செலவாகும். இதற்கு ஏற்கெனவே நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டச் செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும் 40 சதவீதத்தை மாநில அரசுகளும் ஏற்கும்” என்றார்.

ஜார்க்கண்ட் அரசு தங்கள் மாநி லத்தில் அனைத்து குடும்பங்களை யும் இத்திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்டால் நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு அளித்த முதல் மாநிலம் என்ற பெருமையை ஜார்க்கண்ட் பெறும்.

இம்மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் பயனடையும் 57 லட்சம் குடும்பங்களும் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் எஞ்சிய 11 லட்சம் குடும்பங்களை யும் இத்திட்டத்தில் இணைக்க முதல்வர் ரகுவர் தாஸ் திட்டமிட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x