Last Updated : 19 Sep, 2018 08:32 AM

 

Published : 19 Sep 2018 08:32 AM
Last Updated : 19 Sep 2018 08:32 AM

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட‌ தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவும்: பெங்களூரு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பெங்களூவில் நடந்த தென் மாநிலங்களின் மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகியவை அடங்கிய தென் மாநிலங் களின் 28-வது மண்டல மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற் றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் கர்நாடக முதல் வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர், தமிழக துணை முதல் வர் ஓ.பன்னீர் செல்வம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட 6 மாநிலங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "த‌மிழக மீனவர்கள் அருகில் உள்ள மாநிலங்களின் எல்லைக்குள் நுழைந்தால் அம்மாநில காவல் துறையால் கைது செய்யப்படு கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் எரிபொருள், உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை மற்ற கடலோர மாநிலங்களில் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

ஜவ்வாது மலை மற்றும் அதை சுற்றி வாழும் மலைவாழ் மக்களுக்கு குடியிருப்பு, கல்வி, நிரந்தர பணி வாய்ப்பு கிடைக்கும் வகையில் சந்தனமரம் பயிரிடுதல் மற்றும் பசுமை சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஓசூரில் விமான நிலையத்தை திறக்க பெங் களூரு சர்வதேச விமான நிலை யத்தில் இருந்து உடனடியாக தடையில்லா சான்று வழங்கப் பட வேண்டும். ஜிஎஸ்டி மூலம் தமி ழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

பட்டியல் வகுப்பினர், பழங்குடி யினருக்கான உயர்கல்வி உதவி திட்ட நிலுவை தொகை ரூ.1,224 கோடியே 72 லட்சத்தை வழங்க வேண்டும். கிருஷ்ணாவில் இருந்து தங்குதடையின்றி சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டும். காற் றாலை, சூரிய ஒளி மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சா ரத்தை மற்ற மாநிலங்களுக்கு பகிர் வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும்'' என்றார்.

இதே போல புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசும்போது, "புதுச் சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அங்கு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கும் போது பாரபட்சம் காட்டக்கூடாது. புதுச்சேரியின் அடிப்படை கட்ட மைப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என வலியுறுத்தினார்.

கேரள அரசு தரப்பில், ‘‘கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த மழையால் வரலாறு காணாத வகையில் சேதம் ஏற்பட்டுள்ளது. 488-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். 14 மாவட்டங்கள் முற்றிலு மாக சேதமடைந்துள்ளன. லட்சக் கணக்கானோர் வீடுகளையும் உடை மைகளையும் இழந்துள்ளனர். அத னால் உடனடியாக மத்திய அரசு ரூ. 4,700 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்க வேண்டும்''என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதே போல கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியபோது, ''குடகில் பெய்த கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். 1500-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள் ளனர். 150 கிமீ தொலைவுக்கும் அதிகமான சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. மத்திய அரசு கால தாமதமின்றி வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண் டும். கர்நாடக அரசின் வளர்ச்சி திட் டங்களுக்கும் காவல் துறை நவீன மயமாக்கும் திட்டத்துக்கும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண் டும்'' என கோரிக்கை விடுத்தார்.

மாநிலங்களுக்கிடையே ஒற்றுமை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, "கடந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாநிலங்களுக்கு உதவ மத் திய அரசு தயாராக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு விரைவில் வழங்கும். மாநிலங்களுக்கிடையே மத்திய அரசு எவ்வித வேற்றுமையும் காட்டுவதில்லை.

தென் மாநிலங்களுக்கிடையே யான பிரச்சினைகளை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும். ஒற்றுமை, நல்லிணக்கம் பேணப்பட வேண் டும். தென் மாநிலங்களின் காவல் துறை நவீன மயமாக்கப்பட்ட வேண்டும். நக்சலைட், சமூக விரோத குழுக்களை ஒடுக்குவதில் ஒன் றிணைந்து செயல்பட வேண் டும். சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, போதிய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.

இந்த மாநாட்டின் இறுதியில் அடுத்த தென் மாநிலங்களின் மாநாட்டை சென்னையில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x