Last Updated : 16 Sep, 2018 04:03 PM

 

Published : 16 Sep 2018 04:03 PM
Last Updated : 16 Sep 2018 04:03 PM

‘அவசரநிலை, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் ஆகிய இருபெரும் தவறுகளை இந்திரா காந்தி செய்தார்’: நட்வர் சிங் கருத்து

கடந்த 1975-ம் ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையைச் செயல்படுத்த அனுமதித்தது ஆகிய இரு பெரும் தீவிரமான தவறுகளை இந்திரா காந்தி செய்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் ஐஏஎஸ் தேர்வில்வெற்றி பெற்றுக் கடந்த 1966 முதல் 1971-ம் ஆண்டு வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். அதன்பின் 1980-களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, ராஜீவ் காந்தியின் ஆட்சியில் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

நட்வர் சிங் தனது பதவிக்காலத்தில் நண்பர்களுக்கும், வெளியுறவுத்துறையில் தூதராக பணியாற்றியபோது, தனது சக ஊழியர்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, எழுதிய கடிதங்களையும் ஒன்றாகத் திரட்டி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இந்திரா காந்தி, இ.எம்.பார்ஸ்டர், சி. ராஜகோபாலாச்சாரி, லார்ட் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேருவின் இருசகோதரிகள் விஜயலட்சுமி பண்டிட், கிருஷ்ண ஹுதிசிங், ஆர்.கே.நாராயன், நிரட் சி சவுத்ரி, முல்க் ராஜ் ஆனந்த், ஹன் சுயன் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

நட்வர் சிங் பல்வேறு அரசியல் தலைவர்கள் தனக்கும் எழுதிய கடிதங்களை தொகுத்து பொக்கிஷக் கடிதங்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அது குறித்து மூத்த தலைவர் நட்வர் சிங் கூறியதாவது:

இந்திரா காந்தி கடுமையானவர், இரக்கமற்றவர், கம்பீரமானவர், எந்த நடவடிக்கையும் எடுக்கதயங்காதவர் என்று அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறோம். அதேசமயம், இந்திரா காந்தி மிகுந்த அன்பானவர், இரக்கமானவர், கருணை உள்ளம் கொண்டவர், மனிதநேயம் கொண்ட சிறந்த பண்பாளர், புத்தகங்களைப் படிக்கும் தீராத வேட்கை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. மிகவும் நளினமாகவும், நல்ல ரசனையும், பொலிவும் கொண்ட தலைவர் இந்திரா காந்தி.

ஆனால், இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தில் இரு பெரும் தவறுகளைச் செய்துவிட்டார். ஒன்று கடந்த 1975-ம் ஆண்டில் நாட்டில் அவசரநிலையை கொண்டுவந்தது, 2-வதாக ப்ளூஸ்டார் ஆப்ரேஷனை பொற்கோயிலில் நடத்த அனுமதித்தது. இவை இரண்டும் அவர் மீதான வெறுப்பைப் பெற்றுத்தந்தது. இதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்திரா காந்தி மிகப்பெரிய, சக்திவாய்ந்த பிரதமராக திகழ்கிறார்.

கடந்த 1980ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அப்போது இந்திரா காந்தி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் அப்போது இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியில் இருந்தேன். அந்த கடிதத்தில் இனிமேல்தான் உண்மையான கடினமான பணிகள் தொடங்கப்போகின்றன. மக்களின் எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கிறது, ஆனால், அரசியல்,பொருளாதார சூழல் குழப்பம் கொண்டதாக இருக்கிறது.

என்னால் இந்த விஷயத்தில் உதவமுடியாது. நம்முடைய எம்.பி.க்களும்,மக்களும் பொறுமையாக அடுத்த சில மாதங்களுக்கு இருந்தால், சந்தேகமில்லாமல், மீண்டும் நாம் வளர்ச்சியை நோக்கிச் செல்லலாம் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் ராஜாகோபாலாச்சாரி என்னிடம் பல்வேறு விஷயங்களைத் தெரிவித்துள்ளார். ஒருமுறை என்னிடம் ராஜாகோபலாசாச்சாரி கூறுகையில், “ இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற ஐடியாவை மவுண்ட்பேட்டனுக்கு கொண்டு சென்றதே நான்தான், இப்போது இருக்கும் குழப்பத்தை தீர்க்க இந்தியாவைப் பிரிப்பதுதான் தீர்வு என்று நான் மவுண்ட்பேட்டனுக்கு அந்தச் சிந்தனையைவிதைத்தேன்’’ என்றார்.

ஆனால், இந்தியாவைப் பிரிப்பதற்கு மகாத்மா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஒரு விஷயத்தை நல்லது என்று நினைத்து அது மோசமாக அமைந்துவிட்டால், அதை நினைத்து வருத்தப்படக்கூடியவர் மகாத்மா காந்தி. நாங்கள் அனைவரும் இந்தியாவைப் பிரிப்பதற்கு ஆதரவாக இருந்தோம். அப்போது காந்தி, எங்களிடம் கூறினார், நீங்கள் ஒப்புக்கொண்டால் நானும் உங்களுடன் வருகிறேன் என்று கூறிவிட்டு அடுத்த நாள் டெல்லியில் இருந்து புறப்பட்டுவிட்டார்

இவ்வாறு நட்வர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x