Last Updated : 15 Sep, 2018 08:12 AM

 

Published : 15 Sep 2018 08:12 AM
Last Updated : 15 Sep 2018 08:12 AM

காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க முடியாது: கர்நாடக கூட்டணி அரசு 5 ஆண்டு நீடிக்கும்; மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக் களை பாஜக பக்கம் இழுக்க முடியாது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சரவையில் இடமளிக்காததால் பெலகாவியை சேர்ந்த சதீஷ் ஜார்கிஹோளி, ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர்கள் விரைவில் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. அதிருப்தி அடைந்துள்ள அவர் களை சமரசம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி யில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்க முடியாது. சதீஷ் ஜார்கி ஹோளி, ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்டவர்களிடம் பேசி பிரச் சினை தீர்க்கப்படும். பாஜகவைச் சேர்ந்த ஒருசில எம்எல்ஏக்கள் எங்கள் கட்சியில் சேரத் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் யாரையும் இழுக்க முயற்சிக்கவில்லை. பாஜகவினர் ஆட்சியைக் கவிழ்க்க தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது வேதனையாக இருக்கிறது. அது போல நாங்கள் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டோம். கர்நாடக கூட்டணி ஆட்சி கவிழும், தான் முதல்வராகி விடலாம் என எடியூரப்பா பகல் கனவு காண் கிறார். இது ஒருபோதும் நடக்காது.

முதல்வர் குமாரசாமி தலைமை யில் 5 ஆண்டுகள் இந்தக் கூட்டணி அரசு தொடரும். ஜார்கிஹோளி சகோதரர்கள் நீண்ட காலம் காங் கிரஸ் கட்சியில் இருப்பதால் அவர்களுக்கு உரிய முக்கியத் துவம் அளிக்கப்படும். கர்நாடக அரசியலில் நிலவும் குழப்பம் விரைவில் முடிவுக்கு வரும். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி அடுத்த மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x