Last Updated : 11 Sep, 2018 08:40 AM

 

Published : 11 Sep 2018 08:40 AM
Last Updated : 11 Sep 2018 08:40 AM

விடைத்தாள் நகலுக்கு அதிக கட்டணம் வசூல்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனு: சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி திருத்தப்பட்ட தேர்வு விடைத் தாள் நகலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் சிபிஎஸ்இ மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரும் மனு மீது பதில் அளிக்கு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் திருத்தப்பட்ட தேர்வு விடைத்தாள் நகலை பார்வையிட சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் 2011-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் 2016-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை சிபிஎஸ்இ வேண்டுமென்றே பின்பற்ற வில்லை. அதாவது 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் களைப் பெற முறையே ரூ.1,000 மற்றும் ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும் என சிபிஎஸ்இ அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவை மீறி சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள கட்டண அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் 2012 ஆர்டிஐ விதிமுறைகளின்படி விடைத்தாள் நகலுக்காக மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்குமாறு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கோரப் படும் ஆவணத்தின் (விடைத்தாள்) நகல் எடுப்பதற்கான செலவை மட்டுமே மனுதாரரிடமிருந்து வசூ லிக்க வேண்டும் என 2012 ஆர்டிஐ விதிமுறையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக 6 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x