Published : 02 Sep 2018 01:33 PM
Last Updated : 02 Sep 2018 01:33 PM

20 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் செலவைக் காட்டிலும் 10 ரூபாய் அச்சடிக்கும் செலவுதான் அதிகம்: ஆர்டிஐயில் தகவல்

20 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் செலவைக் காட்டிலும் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் செலவுதான் அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்ட ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.50 ரூ.20, ரூ.10 ஆகிய நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் எனக் கேட்டு இந்தியா டுடே வார ஏடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் மனுத் தாக்கல் செய்திருந்தது.

அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுஇருப்பதாவது:

மத்திய அரசு ஒவ்வொரு 2ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.4.18 காசுகள் செலவு செய்கிறது, ஒவ்வொரு 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.2.57 காசுகளும், 100 ரூபாய் நோட்டை அச்சடிக்க  ஒரு ரூபாய் 51 காசுகளும் செலவு செய்கிறது.

அதேபோல ஒவ்வொரு புதிய 10 ரூபாயை நோட்டை அச்சடிக்க ஒவ்வொரு நோட்டுக்கும் ரூ.1.01 காசுகளும், ரூ.20 நோட்டை அச்சடிக்க ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. அதாவது 10 ரூபாய் நோட்டைக் காட்டிலும்ஒரு காசு குறைவாக ரூ.20 நோட்டை அச்சடிக்கச் செலவாகிறது.

ஒட்டுமொத்த கணக்கின்படி, ஆயிரம் எண்ணிக்கையிலான ரூ.50, ரூ.10 நோட்டுகளை அச்சடிக்க தலா ஆயிரத்து 10 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

அதேசமயம், 20 ரூபாய் நோட்டுகள் ஆயிரம் எண்ணிக்கையில் அச்சடிக்க ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகிறது.

ஆயிரம் எண்ணிக்கையில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 1,510 ரூபாய் செலவாகிறது, 500 ரூபாய் நோட்டுகளைஆயிரம் எண்ணிக்கையில் அச்சடிக்க ரூ.2 ஆயிரத்து 570  செல்வாகிறது.  புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆயிரம் எண்ணிக்கையில் அச்சடிக்க 4,180 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

ரூபாய்கள்

ஆயிரம் எண்ணிக்கைக்கு செலவு(ரூபாயில்)

ஒரு நோட்டு அச்சடிக்க செலவு(ரூபாயில்)

ரூ.10

ரூ.1,010

ரூ1.01 காசு

ரூ.20

ரூ.1,000

ரூ.1

ரூ.50

ரூ.1,010

ரூ.1.01

ரூ.100

ரூ.1,510

ரூ.1.51

ரூ.500

ரூ.2,570

ரூ.2.57

ரூ.2000

ரூ.4,180

ரூ.4.18

இதற்கு முன் புழக்கத்தில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அச்சடிக்கும் செலவைக் காட்டிலும் தற்போது செலவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. பழைய ரூ.500 நோட்டு ஒன்று அச்சடிக்க ரூ.3.09 காசுகளும், ரூ.1000 நோட்டு ஒன்று அச்சடிக்க ரூ.3.54 காசுகளும் செலவிடப்பட்டன. ஆனால், தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிப்பது, பழைய ரூ.1000 நோட்டு அச்சடிப்பதைக் காட்டிலும் 64 காசுகள்அதிகமாகச் செலவாகிறது.

அதேபோல, பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஆயிரம் எண்ணிக்கையில் அச்சடிக்க ரூ,3 ஆயிரத்து 90 செலவிடப்பட்டது. தற்போது, ரூ.2,570 மட்டுமே செலவிடப்படுகிறது. ஆயிரம் ரூபாய் நோட்டு ஆயிரம் எண்ணிக்கையில் அச்சடிக்க ரூ,3,540 செலவிடப்பட்டது. தற்போது, ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆயிரம்எண்ணிக்கையில் அச்சடிக்க ரூ.4,180 செலவாகிறது. அதாவது, ரூ.640 கூடுதலாகச் செலவாகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x