Last Updated : 02 Sep, 2018 12:46 AM

 

Published : 02 Sep 2018 12:46 AM
Last Updated : 02 Sep 2018 12:46 AM

பெண் பயணி இருக்கையில் சிறுநீர் கழித்த சக பயணி : மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா

விமானத்தில் பெண் பயணியின் இருக்கையில் குடிபோதையில் சக பயணி சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

கடந்த 30-ம் தேதி ஏர் இந்தியா விமானம் (ஏஐ 102) அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வரும்போது நடுவழியில் இந்த சம்பவம் நடந்தது.

இதன் மீது மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் உடனே கவனம் செலுத்த வேண்டும் என அந்தப் பெண் பயணியின் மகள் இந்திராணி கோஷ் தனது ட்விட்டர் பதிவில் கோரியிருந்தார்.

“கடந்த 30-ம் தேதி இரவு உணவுக்கு பிறகு குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் தள்ளாடியபடி வந்து, எனது தாயின் இருக்கை மீது சிறுநீர் கழித்தார். இதனால் எனது தாய் கடும் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்தார். எனது தாயின் புகாருக்கு பிறகு அவருக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டது. எனினும் விமானம் டெல்லி வந்த

பிறகு அந்தப் பயணி மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டார்” என்று இந்திராணி கோஷ்  கூறியிருந்தார்.

இதற்கு சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, “உங்கள் தாயாருக்கு நேரிட்ட அனுபவம் மிகவும் துரதிருஷ்டவசமானது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக உடனே விசாரணை நடத்தி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு அறிக்கை அளிக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த  சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஏர் இந்தியாநிறுவனம், பயணிகளுக்கு ஏற்பட்ட

அசவுகரியத்திற்கு மன்னிப்புகோருகிறோம்” என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x