Last Updated : 01 Sep, 2018 08:35 AM

 

Published : 01 Sep 2018 08:35 AM
Last Updated : 01 Sep 2018 08:35 AM

கேரளாவை மறுகட்டமைக்கும் பணிக்கு வெளிநாட்டு நிறுவனம் தேர்வு: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை மறுகட்டமைக்கும் பணிக்கு திட்ட ஆலோசகராக கேபிஎம்ஜி என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தை அம்மாநில அரசு தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்த புரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வரலாறு காணாத மழை, வெள் ளத்தால் மிகக் கடுமையான பாதிப்புகளை கேரளா சந்தித்துள் ளது. தற்போது, பல்வேறு பகுதி களில் வெள்ள நீர் வடிந்துள்ளதால் மாநிலத்தில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதேபோல், மாநிலத்தை மறுகட்டமைக்கும் பணிகளிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், இப்பணிகளுக்கு திட்ட ஆலோசகராக கேபிஎம்ஜி என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தை அரசு நியமித்துள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங் கியுள்ளது. இந்த சேவையை இல வசமாக செய்து தருவதாக அந் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதி யில் இருந்த சாலைகளும், பாலங்களும் முற்றிலுமாக சேத மடைந்துள்ளன. இதனை போர்க் கால அடிப்படையில் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகளை டாடா நிறுவனம் மேற் கொள்ளவுள்ளது. இதனை மேற்பார்வையிட மாநிலத் தலைமைச் செயலர் டாம் ஜோஸ் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். கேரள வெள்ள நிவாரணத்துக்கு அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. இதற்காக, வெளிநாடுகளில் இருந்து நிதித் திரட்டுவது குறித்து அரசு ஆலோ சித்து வருகிறது என பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x