Last Updated : 26 Aug, 2018 08:08 AM

Published : 26 Aug 2018 08:08 AM
Last Updated : 26 Aug 2018 08:08 AM

1984 சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பில்லை: ராகுல் காந்தி திட்டவட்ட மறுப்பு

‘‘கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியருக்கு எதிராக நடந்த கலவரத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பில்லை. ஆனால், அது மிகப்பெரிய சோக சம்பவம்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கூறினார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்றுமுன்தினம் லண்டன் வந்தடைந்தார். இந்நிலையில் பிரிட்டன் எம்.பி.க்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த 1984-ம் ஆண்டு சீக்கிய எதிராக நடந்த வன்முறைகள், மிகவும் வேதனை அளிக்கக் கூடிய சோகமாகும். இந்த வன்முறையில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நூறு சதவீதம் ஆதரவாக இருப்பேன். அதேநேரத்தில் அந்த கலவரத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறேன்.

எந்த ஒரு மனிதருக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபடுவது தவறு என்று கருதுகிறேன். இந்தியாவில் சட்டம் தன் கடமையைச் செய்யும். இதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

இவ்வாறு ராகுல் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ராகுல் பேசினார். அப்போதும் சீக்கியர் கலவரம் குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு ராகுல் கூறும்போது, ‘‘சீக்கியர் கலவரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது எல்லோருக்காகவும்தான். நான் முன்பே கூறியது போல், வன்முறை யால் பாதிக்கப்பட்டவன் நான். அந்த வேதனை எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். (ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, விடுதலைப் புலி அமைப்பை சேர்ந்தவர்களால் கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.)

எனவே, இந்த பூமியில் வன்முறை எந்த வகையில் இருந்தாலும், அதை நான் எதிர்க்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

கடந்த 1984-ம் ஆண்டு (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றதால்) டெல்லி, பஞ்சாப் உட்பட வடமாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிரான கல வரம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர் கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐஎதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் பாஜக.வுக்கும் போட்டி

‘‘வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில், அனைத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்த கூட்டணிக்கும் பாஜக.வுக்கும் இடையில்தான் போட்டி’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் மத்தியில் நேற்றுமுன்தினம் பேசியதாவது:

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், பாஜக.வுக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்த கூட்டணிக்கும் இடையில்தான் நடக்க போகிறது. பாஜக.வைத் தோற்கடிப்பதற்குத்தான் காங்கிரஸ் கட்சி முதல் முன்னுரிமை அளிக்கிறது. அத்துடன் பாஜக.வின் பிடியில் உள்ள ஜனநாயக அமைப்புகளை விடுவிக்க வேண்டும்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நேருக்கு நேர் மோதலாக நடைபெறும். ஒரு பக்கம் பாஜக, மற்றொரு பக்கம் அனைத்து எதிர்க்கட்சிகள். இதற்கு காரணம், இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. அதனால், எதிர்க் கட்சிகள் அனைத்தும் முதல் முறையாக ஒன்று சேர்ந்து பாஜக.வை எதிர்க்கும். ஜனநாயகத்தை வலியுறுத்தி வரும் என் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன்மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். வெறுப்புணர்வை பரப்பி விடுகின்றனர். அந்த விஷத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். நமது கொள்கைகளின் சாராம்சம் அகிம்சைதான். வன்முறையால் பாதிக்கப்பட்டவன் நான். எந்த வகையில் வன்முறை இருந்தாலும் கண்டிக்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் பாஜக.வுக்கும் போட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x