Last Updated : 24 Aug, 2018 08:07 PM

 

Published : 24 Aug 2018 08:07 PM
Last Updated : 24 Aug 2018 08:07 PM

‘நான் முதலமைச்சரின் உறவினர், எனக்கே அபராதமா?’

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானின் உறவினர், அதனால் தனக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்றும் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் ராஜேந்திர சிங் சவுஹானுக்கு நகர போக்குவரத்துப் போலீஸார் விதிமீறலுக்காக அபராதம் விதித்தனர். அவர் முதல்வரின் உறவினர்தானா என்று முதல்வரிடமே பத்திரிகையாளர்கள் கேட்க அதற்குப் பதில் கூறாமல் ஷிவ்ராஜ் சிங் சவுகான் மழுப்பியுள்ளார்.

நேரடியாக பதில் கூறாமல், “எனக்குக் கோடிக்கணக்கன சகோதரிகளும் சகோதரர்களும் உள்ளனர்” என்று கூறியுள்ளார் ம.பி.முதல்வர்.

இது தொடர்பான வீடியோவில் ராஜேந்திர சிங் மற்றும் ஒர் பெண்ணும் எஸ்.யு.வி காரில் வந்த போது போலீஸார் வழிமறித்தனர், அப்போது தன்னுடன் வந்த பெண் முதலமைச்சரின் சகோதரி என்றும் தான் இவரது கணவன் என்றும் இதனால் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் கடுமையாக வாதிட்டதாகப்  பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் வைரலானது.

வாகனம் காப்பீடு செய்யப்படவில்லை என்பதால் சுபேதர் தீபங்கர் ஸ்வர்ன்கர் என்ற போலீஸ் ரூ.3,000 அபராதம் கறந்தார்.

முதல்வரின் உறவினர் என்றாரே என்று போலீசிடம் கேட்ட போது, அது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது முதல்வரிடம் வீடியோவைக் காட்டிக் கேட்ட போது, “எனக்கு கோடிக்கணக்கான சிஸ்டர்கள், பிரதர் இன் லாக்கள் உள்ளனர், சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x