Last Updated : 24 Aug, 2018 09:46 AM

 

Published : 24 Aug 2018 09:46 AM
Last Updated : 24 Aug 2018 09:46 AM

அவசரக் காலங்களில் வெளிநாட்டு நிதி பெறலாம்: பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணத்தில் தகவல்

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் நாடு சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி வழங்க முன்வந்தது. ஆனால், இந்த நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கையின்படியே, இந்த நிதி ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய அரசின் நிலைப்பாட்டினை, பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் இதுதொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், இயற்கைப் பேரிடர் போன்ற அவசரக் காலங்களில், பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வெளிநாடுகள் வழங்கும் நிதியுதவிகளை  இந்திய அரசு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x